அர்னாவ் பற்றி மக்கள் செல்வன் VJS பேசியது தவறுதான்..! என்னுடைய சப்போர்ட் அர்னாவிற்குதான்… வீடியோ வெளியிட்ட ஜேம்ஸ் வசந்தன்…

0

விஜய் டிவி யில் கடந்த 7 வருடமாக உலகநாயகன் கமல்காசனால் தொகுத்து வழங்கப்பட்ட பிக் பாஸ் ஷோ தற்போது இந்த வருடம் விஜய் சேதுபதி அவர்களால் தொகுத்து வழங்கபடுகிறது. இரு வாரங்கள் முன் விஜய் சேதுபதி அவர்களின் தொகுப்பில் BB-8 கோலாகலமாக தொடங்கப்பட்டது.

இதில் சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி போன்ற 18 போட்டியாளர்கள் பிபி வீட்டிற்குள் நுழைந்தனர். நுழைந்த முதல் நாளே சாச்சனா வெளியேற்றப்பட்டு பின் வீட்டிற்குள் நுழைந்தார்.இதைத்தொடர்ந்து முதல் வாரம் ரவீந்தர் அவர்கள் எலிமினேஷன் செய்யப்பட்டு வெளியே சென்றார்.நேற்றும் எலிமினேஷன் ரவுண்டு நடைபெற்றது அதில் யாரும் எதிர்பாராத வகையில் அர்னாவ் வெளியேற்றப்பட்டார்.

வெளியே வந்த பின் டீம் மேட்ஸ்கு கருத்து சொல்லுமாறு VJS கேட்டுருப்பார்.ஆனால் அர்னாவ் கருத்து சொல்லாமல் உள்ளே உள்ளவர்களை குறை கூறி கொண்டிருப்பார்.இதனால் அவரின் பேச்சை இடையில் நிறுத்திய VJS உங்களை கருத்து தான் கூற சொல்லிருந்து வன்மத்தை கொட்ட சொல்லவில்லை என்று கூறி இருப்பார்.இதை ஜேம்ஸ் வசந்தன் விமர்சனம் செய்திருப்பார் அதில் அவர் அர்னாவை நோஸ் கட் செய்யும் விதமாக VJS அவர் பேசியது தவறு என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *