GOAT படத்தை எடுத்ததற்காக வெங்கட் பிரபுவை புகழ்ந்து தள்ளிய ரஜினிகாந்த்…

0

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜயின் நடிப்பில் உருவாகி தற்போது வெளியாகி வெற்றி வசூலை திரட்டி கொண்டிருக்கும் படம் தான் GOAT. ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா அவர்கள் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, மோகன் போன்ற பிரபலங்கள் நடித்திருந்தனர்.

இப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகி இன்றுவரை வெற்றி வசூலை திரட்டி கொண்டுள்ளது.இப்படத்தில் சிவகார்த்திகேயன், த்ரிஷா கேமியோ, அஜித்- தோனி ரெபரென்ஸ், விஜய்யின் வில்லத்தனமான நடிப்பு என பல சுவாரசியமான திருப்பங்களை வைத்திருந்தனர்.விஜயின் வில்லத்தனத்தை இதில் மிரட்டலாக வெங்கட் பிரபு காண்பித்திருப்பார்.

இந்நிலையில் படத்தை திரையரங்கில் சென்று பார்த்த ரஜினிகாந்த் அவர்கள் வேங்கட்பிரபு அவர்களை ஆழ்ந்த மனதுடன் பாராட்டியுள்ளார்.இந்த தகவலை வெங்கட்பிரபு அவர்கள் தனது எக்ஸ் பக்கத்தில் நன்றி தலைவரே GOAT படத்தை பார்த்து மனதார பாராட்டியதற்கு என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *