சொர்க்கவாசல் பர்ஸ்ட் லுக்கில் சிறைக்கைதியாக ஆர்ஜே பாலாஜி…தெறிக்கவிட்ட போஸ்டர்…

0

காமடி நடிகராக அறிமுகமாகி அதன் பின் ஹீரோவாகவும் இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் கலக்கியவர் தான் ஆர்ஜே.பாலாஜி.இவர்தான் சூர்யாவின் 45 வது படத்தை இயக்கப்போவதாக தகவல் வெளி வந்திருந்தது.இதன் பணிகள் வேகமாக தொடங்கப்பட்ட நிலையில் சூர்யா ரசிகர்கள் மிக ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் ஆர்ஜே.பாலாஜியின் நடிப்பில் வெளிவர இருக்கும் சொர்க்கவாசல் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்துள்ளது.இப்போஸ்டரில் ஆர்ஜே.பாலாஜி அவர்கள் சென்னை மத்திய சிறைக்கைதியாக காணப்படுகிறார்.இதை பார்த்த ரசிகர்கள் படத்தின் வெளியீட்டிற்கு மிகுந்த எதிர்பார்ப்புகள் வைத்திருக்கின்றனர்.

இப்படத்தின் இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் மற்றும் இசையமைப்பாளராக கிறிஸ்டோ சேவியர் வருகிறார்கள்.இப்படத்தை தயாரிப்பது ஸ்வைப் ரைட்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் ஆகும்.இப்படத்தின் பணிகள் தீவிரமாக நடப்பதால் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததே சூர்யாவின் 45 வது படம் தொடங்கப்படும் என சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *