வேட்டையனில் பகத் பாசில் பேசிய முத்து பட டயலாக்…. வைரலான அன்சீன் வீடியோ…

0

டிஜே ஞானவேல் இயக்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் வேட்டையன் படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றி வசூலை திரட்டி கொண்டுள்ளது.இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அமிதாப்பச்சன், ராணா டகுபதி, பகத் பாசில் போன்ற மிகப்பெரிய பிரபலங்கள் நடித்துள்ளன.இப்படம் வெளிவந்து சில நாட்களுக்குள்ளே உலகம் முழுவதும் பரவி 240 கோடி மேல் வசூல் செய்துள்ளது.

இப்படத்தை ரசிகர்கள் குடும்பத்துடன் வந்து கண்டு கழிக்கின்றனர்.திரையங்குகளில் ஹவுஸ் புல் என சொல்லும் அளவிற்கு கூட்டம் கூடுகிறது.இப்படத்தில் சில காட்சிகள் நீக்கப்பட்டிருக்கிறது.அதை படக்குழு இப்பொழுது இணையத்தில் வெளிவிட்டுள்ளது.அதில் பகத் பாசில் மற்றும் ரித்திகா சிங் பேசும் டயலாக் இடம் பெற்றுள்ளது.

அந்த நீக்கப்பட்ட காட்சிகளில் பகத் பாசில் அவர்கள் ரித்திகா சிங்கிடம் முத்து பட டயலாக் ஒன்றை பேசியுள்ளார்.இந்த காட்சிகளை பார்த்த ரசிகர்கள் இது படத்தில் இருந்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும் என்று கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *