பிக் பாஸ்…. ஆங்கரிங்கில் மாஸ் காட்டிய நடிகை சமந்தா…. வைரல் ஆகும் வீடியோ…..

0

இந்திய சினிமாவில் முக்கியமான நிகழ்ச்சியில் ஒன்றாக பார்க்கப்படுவது பிக் பாஸ். இதெற்கென்று இந்திய அளவில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சின்னத்திரையின் முக்கியமான நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழில் மட்டும் இல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி தற்போது ஹிந்தியில் 18 வது சீசன்னும் தமிழ் மற்றும் தெலுங்கில் 8 வது சீசன்னும் நடந்துகொண்டிருக்கிறது. தமிழில் சீசன் 7 வரை நடிகர் கமலஹாசன் நடத்தி வந்தார்.

அவர் திடீரென விலகியதால் தற்போது சீசன் 8 விஜய் சேதுபதி நடத்திக் கொண்டிருக்கிறார். அவர் தன்னுடைய தொகுப்பாளர் பணியினை மிகவும் எதார்த்தமாக அருமையாக நடத்திக் கொண்டிருப்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். இதற்க்கு முன்னதாக ஒரு முறை கமலஹாசன் உடல் நலம் சரி இல்லாததால் கொரோன தொற்று ஏற்பட்டதால் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு நடிகை ரம்யா கிருஷ்ணன் களம் இறங்கினார். அது மட்டும் இல்லாமல் ஓடிடியில் பிக் பாஸ் நிகழ்ச்சியினை கமலுக்கு பதிலாக சிறிது காலம் நடிகர் சிம்பு தொகுத்து வழங்கினார்.

தமிழில் எவ்வாறு கமலஹாசனுக்கு பதிலாக வேற நடிகர்கள் தொகுத்து விளக்குவதற்கு என்ட்ரி கொடுத்தார்களோ அதேபோல் தெலுங்கிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியினை நடிகர் நாகர்சூனா தொகுத்து வழங்கி வந்தார். திடீரென நாகர்சூனாக்கு பதிலாக ஒரு எபோசோடினை தொகுத்து விளங்குவதற்கு நடிகை சமந்தா என்ட்ரி கொடுத்தார். அவர் தொகுத்து விளங்கிய அந்த எபிசோடின் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அவருடைய ரசிகர்கள் இதனை வைரல் ஆக்கி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed