சிவகார்த்திகேயனுக்கு டஃப் கொடுக்குமா கவினின் “ப்ளெடி பெக்கர்”… கவினின் மாஸ் என்ட்ரி கொடுத்த “ப்ளெடி பெக்கர்” டீசர்….

0

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவரான நெல்சன் இயக்கி உள்ள படம் தான் “ப்ளடி பெக்கர்”. இந்த படத்தில் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான கவின் நடித்துள்ளார். இவர் விஜய் டிவியில் சீரியலில் நடித்து வந்தவர். அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தன்னுடைய அடையாளத்தை மிகை படுத்தியவர்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. இவர் நடித்த முதல் படம் லிப்ட் இந்த படம் அவருக்கு பெரிதளவில் நல்வாய்ப்பினை அமைக்கவில்லை. மேலும் இவர் நடித்து வெளிவந்த டாடா படம் இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. இந்த படத்தில் அப்பா பையன் பாசத்தை நுணுக்கமாக நடித்திருப்பார். மேலும் இந்த படத்திற்கு பின்னர் இவருக்கு ரசிகர்களும் அதிகளவில் ஆனனர்.

டாடா படத்தினை தொடர்ந்து ஸ்டார் படத்தில் நடித்தார் அந்த படத்திற்கு அதிகளவில் எதிர்பார்ப்பு காணப்பட்டபோதிலும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் எதிர் பார்த்த அளவிற்கு வெற்றி கிடைக்கவில்லை. இந்நிலையில் கவின் நடிப்பில் வெளிவர இருக்கிற ப்ளடி பெக்கர் படத்தின் டீசர் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தில் கவின் யாசகராக நடித்துள்ளார்.

இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இந்த படத்தில் கவின் கால் ஊனம் உடைய ஒரு யாசகராக நடித்து இருப்பர். ஆட்டோ ஓட்டுபவரிடம் சென்று தர்மம் வாங்குவர். அதே சமயம் அங்கு வந்து கொண்டிருந்த ஒரு திருமண ஊர்வலத்தை பார்த்ததும் எழுந்து நடனம் ஆடிக்கொண்டிருப்பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed