பிக் பாஸ் சீசன் 8… நான் நாமினேட் ஆனாலும் பரவாயில்லை… ஆண்களுடன் மோதலில் ஜாக்லின் வெளியான ப்ரோமோ…!

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அதிகளவில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இது வரையில் சீசன் 7 வரை நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சி காதல், கோபம், அழுகை, வருத்தம், நட்பு என மனிதனிலில் ஏற்படும் அத்தனை தாக்கத்தையும் வைத்து எடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சியாகும். தற்போது பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பித்த நிலையில் தொகுப்பாளராக களம் இறங்கியுள்ளார்.

இதில் போட்டியாளர்களாக தீபக்,அர்னவ்,ரஞ்சித்,ரவீந்தர் சந்திர சேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால்,நான் முத்துக்குமரன்,சத்யா, அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுண்டன்,சார்சனா, அன்ஷிதா, சுனிதா, RJ அனந்தி, ஜாக்லின், தர்ஷா குப்தா, பவித்ரா, ஜனனி, என 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். மேலும் விஜய் சேதுபதி ஒவ்வொரு போட்டியாளர்களையாக அறிமுகம் செய்து பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தார். தற்போது பிக் பாஸ் வீட்டில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனி தனி இடம் என்பது போல் நடுவில் ஒரு கோடு போட்டிருப்பதை பாத்திருப்போம் .

தற்போது பிக் பாஸ் சீசன் 8 ர்க்கான ப்ரோமோ வந்துள்ளது அதில் பெண்கள் ஆண்களை நாமினேட் செய்யமாட்டார்கள் என எடுத்திருக்கும் முடிவு எனக்கு பிடிக்கவில்லை என ஜாக்லின் ஆண்களிடம் மோதலில் ஈடுபடுகிறார். இதனால் நான் வெளியே போனாலும் பரவாயில்லை ஆனால் ஆண்களை நாமினேட் செய்யமாட்டோம் என்ற முடிவை நான் ஏற்று கொள்ள மாட்டேன் என கூறி உள்ளார். இந்த ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பையும் சுவரசியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed