தளபதி 69 படத்தின் பூஜை பிரமாண்டமாக தொடங்கப்பட்டது..! அதன் புகைப்படங்கள் வைரல்..!

0

தமிழ் சினிமாவில் முன்னணி ரசிகர்கள் பட்டியலில் இருப்பவர் தான் இளைய தளபதி விஜய். இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். இவர் தற்போது நடிக்க இருக்க கூடிய படம் தான் தளபதி 69. மேலும் இளையதளபதி விஜய் சமீபத்தில் அரசியல் பயணம் மேற்கொள்ளலாம் என நினைத்து தமிழக வெற்றி கழகம் ஒன்றை உருவாக்கி உள்ளார். மேலும் இவர் அரசியலுக்காக சினிமாவில் இருந்து விலக போவதாகவும் கூறியுள்ளார். மேலும் சினிமாவில் ஒப்பந்தம் ஆகி இருக்கும் படங்களை மட்டும் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.

மேலும் இவர் நடிக்கும் கடைசி படம் இளைய தளபதி 69 ஆக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் சினிமாவில் இருந்து விலக போறது அவருடைய ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி. மேலும் இவர் நடிக்கும் தளபதி 69 படத்தினை எச் வினோத் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் கெளதம் மேனன் இணைந்துள்ளார். மேலும் இந்த படத்தில் பிரகாஷ் ராஜ் நரேன் பூஜா ஹெஹ்ட் மம்தா பாபி தியால் ஆகியோர் நடிக்க உள்ளனர். நடிகை பிரியாமணியும் இந்த படத்தில் இணைந்து உள்ளார். மேலும் இந்த படத்தில் இசையமைப்பாளர் அனிரூத் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் பூஜை ஆனது இன்று தொடங்கப்படுள்ளது. மேலும் இந்த படத்தின் பட பிடிப்பு நாளை ஆரம்பிக்க இருக்கிறது. இந்த படத்தின் பூஜைக்கான போட்டோஸ் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. மேலும் இளையதளபதி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். படத்தின் பூஜை போட்டோவை ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்கி கொண்டு இருக்கிறார்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed