தியா சூர்யா-வின் பெண்களுக்கான ஆவணப்படம்…!!இளம் வயதிலே சூர்யா ஜோதிகாவிற்கு பெருமை சேர்த்த மகள்….

0

தமிழ் சினிமாவில் 90s காலத்தில் ரசிகர்களின் மனம் கவர்ந்த கனவு தேவதையாக இருந்தவர் தான் ஜோதிகா. இவர் ஹிந்தி மூலம் சினிமாவிற்குள் நுழைந்திருந்தாலும் கூட இவருக்கு வெற்றி கொடுத்து கொண்டாடியது தமிழ் சினி துறையே.

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் ஜோதிகா. அதை தொடர்ந்து தன்னுடன் நடித்த சக நடிகரான சூர்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்த இவர் பின் 36 வயதினிலே படத்தின் மூலம் மறுபடியும் சினிமாவிற்குள் நுழைந்தார். சூர்யா ஜோதிகா என்னும் ஜோடிக்கு தியா என்னும் மகளும் தேவ் என்னும் மகனும் உள்ளனர்.

தியா தன் 12th படிப்பை முடித்த நிலையில் அவரது மார்க்கும் வெளியாகி இருந்தது .இப்போது சூர்யா மற்றும் ஜோதிகா தன் பிள்ளைகளின் படிப்பிற்காக குடும்பத்தோடு மும்பையில் தங்கியுள்ளனர். இதற்கிடையில் தற்போது தியா சூர்யா ஆவணப்படம் ஒன்றை இயக்கி அது திரைப்பட விழாவில் விருதும் வென்றுள்ளது. ‘The Untold Story of Women Behind the Scenes’ என்ற தியா இயக்கியுள்ள ஆவணப்படம், திரிலோகா இன்டர்நேஷனல் ஃபிலிம் பேர் விருதுகளில் இரு விருதுகளை வென்றது.

சிறந்த ஆவணப்படத்திற்கான விருதினையும், சிறந்த திரைக்கதை எழுத்தாளர் என்ற விருதுனையும் பெற்றுள்ளது. இதனை ஜோதிகா அவர்கள் தான் மகள் பெற்ற சான்றிதழோட தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டிருந்தார். அதில் அவர் பொழுதுபோக்கு துறையில் பெண் கேஃபர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடு குறித்த ஒரு மாணவியாக அர்த்தம் உள்ள ஆவண படத்தை உருவாக்கியதற்காக உன்னை நினைத்து பெருமை அடைகிறேன் தியா என்று பதிவிட்டுள்ளார். இதைப்போன்று தொடர்ந்து செயல்பட வாழ்த்துக்கள் தெரிவித்த ஜோதிகா தனது மகள் இயக்கிய ஆவணப்படத்தின் யூடியூப் லிங்கினையும் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலர் தியாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த ஆவணப்படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவின் ரசிகர்கள் கண்டு மகிழ்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed