எண் கணித ஜோதிட படி இந்த தேதிகளில் பிறந்த பெண்களை அனைவரும் விரும்புவர்களாம்… எந்த தேதிகளில் தெரியுமா..?

0

எண் கணித ஜோதிட படி ஒவ்வொருவரும் பிறந்த தேதியை வைத்து அவர்களின் சாதகங்களை கணிக்க முடியும் .பொதுவாக ஒருவர் பிறந்த நேரம் நட்சத்திரம் ராசி பலன்களை வைத்து அவர்களின் எதிர்காலம் மற்றும் அவர்களின் நேர்மறை எதிர்மறை எண்ணங்களை கணிபார்கள். அந்த வகையில் எண் கணித ஜோதிட படி இந்த தேதிகளில் பிறந்த பெண்களை அனைவருக்கும் அதிகமாக பிடிக்குமாம். அது என்ன என்ன தேதி என்று பார்க்கலாம்.

3,12,21 மற்றும் 30ம் தேதிகளில் பிறந்த பெண்களுக்கு அனைவரையும் ஈர்க்கும் ஆற்றல் அதிகமாகவே இருக்குமாம். இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் வசீகரிக்கும் ஆற்றலையும் ஒளிநிறைந்த முக தோற்றத்தையும் மற்றும் இரக்க குணமும் அதிக அளவில் உடையவர்களாக காணப்படுவார்களாம்.

மேலும் இவர்கள் தங்களுக்கு என்று ஒரு தனித்துவமான பாணியை வைத்திருப்பார்களாம். அந்த வைகையில் இவர்கள் ஒரு கூட்டத்தில் இருந்தாலும் தனியாக தெரிவார்களாம். மேலும் இவர்களிடம் மற்றவர்களை அரவணைத்து கொள்ளும் பண்பும் மேலும் இவர்களிடம் பேசும் பொது மற்றவர்களுக்கு ஒரு வித அமைதியும் கிடைக்குமாம். எனவே இந்த தேதிகளில் பிறந்த பெண்களை அனைவருக்கும் அதிகளவில் பிடிக்குமாம்.

5,14 மற்றும் 23 ம் தேதிகளில் பிறந்த பெண்கள் அதிகளவில் மற்றவர்களை ஈர்க்கும் திறன் கொண்டவர்களாக இருப்பார்களாம். அவர்களுடைய வாழ்க்கையை பெரிய போராட்டமாக எடுத்து கொள்ளாமல் எளிய முறையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இவருக்கு என்று ஒரு தனித்துவம் இருக்குமாம் மேலும் தன்னுடைய வாழ்க்கையை வித்தியாசமாக வாழ வேண்டும் என நினைப்பார்களாம். மேலும் இவர்களின் வேடிக்கையான பேச்சு திறன் மற்றும் சுதந்திரமான செயல் மற்றவர்களை எளிதில் ஈர்த்துக் கொள்ளுமாம். தன்னுடைய வாழ்வில் சாதிக்க வேண்டும் எனவும் எபோழுதும் உற்சாகமாகவும் இருக்கும் இவர்களை அதிகளவில் அனைவருக்கும் மிகவும் பிடிக்குமாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed