கார்த்தி ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த மெய்யழகன் படத்தின் ட்ரைலர் வெளியாகியது..

0

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்கரான கார்த்தி நடித்திருக்கும் படம் மெய்யழகன். இவர் முதல் படத்திலேயே தன் வெற்றி இடத்தை பிடித்து முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.


இந்த படத்தில் நடிகர் அரவிந்த் சுவாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அரவிந்த் சுவாமி மெய்யழகன் படத்தை பற்றி கூறுகையில் தன்னுடைய வாழ்க்கையை படமாக எடுத்தது போல் உள்ளது என்று கூறிஉள்ளார். இந்த படத்தில் ராஜ் கிரண் நடித்துள்ளார் மற்றும் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை ஸ்ரீ திவ்யா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு கோவிந்த் வசந்த் இசை அமைத்திருக்கிறார். சூர்யாவின் நிறுவனமான 2டி நிறுவனம் தயாரித்த இந்த படத்தை பிரேம்குமார் இயக்கி உள்ளார்.


இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்பொழுது டிரைலர் வெளியாகி உள்ளது. டிரைலரும் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. செப்டம்பர் 26 ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed