லலிதாவின் பாட்டுக்கு பாட்டு புகழ் அப்துல் ஹமீதா இது..? தற்போது எப்படி இருக்காரு பாருங்க..!
இந்தியாவில் இருந்து அதுவும் தமிழநாட்டில் மிகவும் விரும்பப்பட்ட வானொலி நிகழ்ச்சியில் முதல் இடம் பிடிப்பது இலங்கை வானொலி நிகழ்ச்சி. அதற்கு முக்கிய காரணம் இந்த நிகழ்ச்சிகள் முழுக்க முழுக்க யாழ்ப்பாண தமிழில் இருப்பதுடன் இலங்கை யாழ்ப்பாண தமிழை ரசிக்காத தமிழ்நாட்டு ரசிகர்கள் இல்லை எனலாம். யாழ்ப்பாண தமிழை கம்பீரத்தோடு உச்சரித்த பிரபலம் அப்துல் கமீது அவர்கள். அவர்களின் தெளிவான உச்சரிப்பு அழுத்தம் திருத்தமான வார்த்தைகள், இரத்தின சுருக்கத்தோடு விளங்கும் உரையாடல்கள் ரசிகர்களுக்கு பிடித்தமான குரலாக மாறிப்போனது. 2கே-காலத்தில் தொலைதொடர்பு சாதனங்கள் நம்மை ஒன்றிணைப்பதாக இருந்தாலும் நிஜத்தில் அவற்றால் நம் உறவுகளை விட்டு நீங்கி கொண்டிருக்கிறோம். 80 மற்றும் 90 கால்களில் தூரத்தில் இருக்கும் உறவுகளுக்கு கடிதம் மூலம் பகிர்ந்து கொண்ட அன்பை நேரடியாக ஸ்மார்ட் போனில் பேசுவதில் கிடைப்பதில்லை.
இன்றைக்கு வளர்ந்திருக்கும் தொழில் நுட்ப வளர்ச்சிகள் மூலம் நாம் பல வித தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பேஸ் புக், யூ-டூப் போன்ற வலைத்தளங்களில் பொழுது போக்கு நிகழ்ச்சிகள் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வளர்ச்சிகள் யாவும் இல்லாத காலங்களில் மனிதர்களுக்கு வானொலி நிகழ்ச்சிகள் பொழுது போக்கு சாதனமாக இருந்தது.
அதில் தமிழ் நாட்டில் ரசிகர்கள் மிகவும் விரும்பி கேட்டது இலங்கை வானொலி நிகழ்ச்சி. தத்தம் பணிகளை செய்து கொண்டே ஆண்களும், அன்றாட வீட்டு வேலைகளை செய்து கொண்டே பெண்களும் வானொலி நிகழ்ச்சியை கேட்டு ரசித்தனர். அதற்கு முக்கிய காரணம் ஆக இருந்தது வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்,மேடை பேச்சாளர், நடிகர் என பன் முக திறமை கொண்ட அப்துல் கமீது அவர்களின் பேச்சுக்கள். இவருக்கு அப்போதே நிறைய ரசிகர்கள் இருந்தார்கள்.
சன் தொலைக்காட்சியில் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தியவர் அப்துல் கமீது, மேலும் பாடல் பாடும் நபர்கள் முடிக்கும் வார்த்தைகளின் இறுதியில் இருக்கும் எழுதுக்களை கொண்டு பாடல் தொடங்க வேண்டும் அப்போது பாடல் பாடுபவரக்ளுக்கு எளிதில் புரியவைக்க அவர் நெடில் மற்றும் குறில் எழுத்துக்களை புரிய வைப்பார். இது போன்ற தமிழ் மொழியின் பற்றினாலும் அவரின் புலமையாலும் மக்களால் விரும்பப்பட்டார். வீட்டில் நான்காவது குழந்தையாக பிறந்து நான்கு வயதானபோது தந்தை தவறி விட தாயரின் கடின உழைப்பில் வளர்ந்துள்ளார். தாயருக்கு உதவியாக தயார் செய்யும் பலகாரங்களை வீதியில் விற்று படிப்பை தொடர்ந்துள்ளார்.
இவர் தமிழ் மொழியில் மேல் கொண்ட பற்றினால் சிறு வயது முதலே மேடை நாடகங்களில் நடித்து திறமையை நிரூபித்துள்ளார். பதினெட்டு வயதில் இருந்து இலங்கை வானொலியில் பணிபுரிந்து வருகிறார். இவர் தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் அதில் உலகநாயகன் கமல் அவர்களின் தெனாலி படத்திலும் இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் மாதவன், சிமரன் நடித்த கன்னத்தில் முத்தமிட்டால் படத்திலும் நடித்துள்ளார். இரண்டு படங்களிலும் இலங்கை யாழ் பாண தமிழ் பேசப்பட்டிருக்கும். இந்த படங்களுக்கு யாழ்ப்பாண தமிழை கற்று கொடுத்து பயிற்சி அளித்தது அப்துல் கமீது அவர்கள்.
தமிழ் நாட்டில் பயன்டுத்தாத தூய தமிழ் சொற்களை இலங்கை தமிழ் மக்கள் பேச்சு வழக்கில் பயன்படுத்தி வருகிறார்கள். அது, இது போன்ற சொற்கள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சொற்கள் ஆனால் தமிழகத்தில் உது என்ற சொல் நாம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். உது என்பது தமிழ் இலக்கணத்தில் இருக்கும் ஒரு சொல் அதன் பொருள் தூரத்தில் இருக்கும் பொருளை அது என்றும், அருகில் இருக்கும் பொருளை இது என்றும், நம் முன்னால் இருக்கும் பொருளை உது என்றும் குறிப்பிட படுவதாக இருக்கிறது. இந்த சொற்கள் இலங்கை தமிழில் இன்றும் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள் என்று பேட்டியில் அவர்கள் தமிழ் மொழியின் இனிமையை பற்றி கூறியுள்ளார்.
தற்போது அவரை பற்றி சில வதந்திகள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அவர் தற்போது வானொலி நிகழ்ச்சியை தொடராததாலும், அவரை பற்றிய செய்திகள் வராததால் அவர் இறந்து விட்டார் என்று வலைத்தளத்தில் செய்திகள் வெளியானது. அதற்கு அவர் விளக்கமளித்துள்ளார், தான் இது போல் மூன்று முறை இறந்து விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 73 வயது ஆன அவர் தான் நலமோடு இருப்பதாகவும் ரசிகர்கள் கவலை கொள்ள வேண்டாம் என்றும் கேட்டு கொண்டுள்ளார்