திருடன் கேமரால மாட்டி பாத்துருப்பீங்க… கேமராமேன் திருடி மாட்டி பாத்துருக்கீங்களா.. பாருங்க விழுந்து விழுந்து சிரிப்பீங்க..!
திருமணங்களில் நிறைய சுவாரசியமான நிகழ்வுகள் நடைபெறும். அதை பதிவு செய்து வைப்பதற்காக கேமராமேன் எப்போதும் கைகளில் கேமராவோடு மணமக்கள் பின்னால் செல்வார். திருமணம் அதனை சார்ந்த சடங்குகள் எல்லாம் முடிந்ததும் அதனை படம் பிடித்தவர் எது நன்றாகவும், சுவாரசியமாகவும் இருக்கிறதோ அதனை எடிட் செய்து அதற்கு ஏத்தாற் போல் பாடல்களை இணைத்து மெருகேற்றுவார்.
இந்த 2k-காலத்தில் யார் எதனை பதிவு செய்து இணையத்தை கதி கலங்க வைக்கிறார்கள் என்று தெரியாது. தற்கால தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டதை உணர்த்தும் பெரிய சாம்ராஜ்யமாக விளங்குவதற்கு செல்போன் வளர்ச்சி முக்கிய காரணமாகும். செல்போன் இல்லை என்றால் வாழ்க்கை நகராது. இன்னொரு கை போல் விளங்கும் செல்பேசி நம் வாழ்க்கை தகவல்கள் அனைத்தும் இதிலே பதிவாகிறது. திருமணங்கள் ஆனாலும் சரி, கோவில் திருவிழா ஆனாலும் சரி, மற்ற முக்கிய நிகழ்ச்சிகள் ஆனாலும் சரி அதை பார்த்து ரசிப்பதற்கு பதிலாக அந்த நிகழ்ச்சியை பதிவு செய்து மற்றவர்களுக்கு பரப்புவதிலேயே கண்ணும் கருத்துமாக செயல் படுகின்றனர் இன்றைய தலைமுறையினர். தொழில்நுட்ப படம்பிடிப்பாளர்களையே ஓவர்டேக் செய்து விடுகிறது தற்கால தொழில்நுட்ப வளர்ச்சியான செல்பேசி.
திருமணங்களை பதிவு செய்யும் கேமெராமேன் சுவாரசியமாக நிகழும் நிகழ்வுகளை பதிவு செய்வதை விட்டு விட்டு அங்கே பலகாரங்கள் வைக்கப்பட்டிருக்கும் தட்டுகளிலேயே கவனத்தை செலுத்தியுள்ளார் என்பது அவரது செயலில் நிரூபித்துள்ளார். பசியில் வாடிய கேமராமேன் அங்கே வைக்கப்பட்டிருந்த லட்டுகளில் ஒன்றை கேமராவை படம் பிடிப்பது போல் கொண்டு சென்று அலேக்காக லட்டு ஒன்றை கேமராவில் இடுக்கி கொண்டு செல்கிறார். இதனை அங்கிருந்த இன்னொரு சமூக வலைதளவாசி ஒருவர் படம் பிடித்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். படம் பிடிக்க சென்றவரை படம் பிடித்து வைரல் ஆகிய குறும்புகாரா இணையவாசியை பாராட்டும் வலைத்தளத்தினர் அந்த கேமராமேனின் கொடூர பசியை நினைத்து வருத்தம் தெரிவித்துள்ளனர். அந்த சுவாரசியமான நிகழ்வை இங்கே காணலாம்..