வயிற்றுப் பசிக்காக பால் கரப்பவரிடம் சென்று எவ்வளவு அழகா கெஞ்சுது பாருங்க…

பொதுவாக செல்லப்பிராணிகள் வளர்ப்பில் பலரும் நாய் வளர்ப்புக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதற்கு அடுத்த இடத்தை  பூனைகள் பிடிக்கின்றன. வீட்டில் வளர்க்கப்படும் பூனைகளும் பிள்ளைபோல் வளர்ந்துவிடுவதுதான் இதற்குக் காரணம். பூனைகள் மற்ற விலங்குகளைவிட கூடுதலாக நேசம் காட்டுவதோடு, வீட்டுக்குத் தேவையான உதவிகளையும் செய்கிறது. இங்கே ஒரு பூனையின் செயல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்படி அந்த பூனை என்ன செய்தது எனக் கேட்கிறீர்களா?

 பொதுவாகவே நாய்கள் வீட்டைப் பாதுகாப்பதில் தொடங்கி, எஜமானர்களிடம் விஸ்வாசம் காட்டுவதுவரை அசத்தும். பூனை காவல் காக்காதே தவிர, வீட்டில் இருப்பவர்களிடம் ,மிகவும் பிரியமாக இருக்கும். அதுமட்டும் இல்லாமல் வீட்டில் இருப்போரின் காலை செல்லமாக முட்டிக் கொண்டே மியாவ்..மியாவ் என கத்துவது பார்க்கவே அழகாக இருக்கும்.

இங்கேயும் அப்படித்தான் ஒருவர் தன் வீட்டில் பூனை வளர்த்து வந்தார். அவர் சொந்தமாக மாடுகள் வைத்திருந்து பால் கறந்து வணிகம் செய்து வந்தார். அவர் பால் கறக்கும்போது அப்பாவி போல் அவர் பக்கத்தில் போய் நின்றுகொள்கிறது அந்த பூனை. அதுமட்டும் இல்லாமல் நாய் போல் இருகால்களில் நின்று, பவ்யமாக நிற்கிறது. எஜமானர் பால் கறந்து கொண்டிருக்கும்போது அவ்வப்போது அவரை கொஞ்சும் தொணியில் செல்லமாகக் கூப்பிட்டுவிட்டு அப்பாவி போல் நிற்கிறது. உடனே பூனையை வளர்க்கும் எஜமானர் பசுவின் காம்பினை அப்படியே பூனையின் பக்கம் பிசுக்குகிறார். பால் பீய்ச்சி அடிக்கிறது. பூனை அதைக் குடிக்கிறது. இதோ நீங்களே பாருங்களேன். கொஞ்சி, கொஞ்சியே ஸ்கெட்ச் போட்டு இந்த பூனை எவ்வளவு அழகாக வயிற்ற ரொப்பிக் கொள்கிறது எனத் தெரியும்.

  புத்திசாலித்தனத்தையும், அன்பையும் ஒருசேர இந்த பூனையிடம் இருந்தே கற்றுக்கொள்ள வேண்டும் என நெட்டிசன்கள் இதை ஷேர் செய்துவருகின்றனர். 

You may have missed