நடிகர் மனோஜ் மகள்களா இது..? எவ்ளோ பெரிய ஆளா இருக்காங்க பாருங்க…!
என்னதான் உச்ச நட்சத்திர இயக்குனரின் மகனாக இருந்தாலும் தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதிக்க முடியாமல் போனவர் தான் மனோஜ். ஆம்..பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்ட பலரும் புகழின் உச்சத்தில் இருந்தாலும், மனோஜால் அவ்வளவு பெரிதாக சோபிக்க முடியவில்லை.
2018 ஆம் ஆண்டில் எந்திரன் பார்ட் 2 வெளியானது. அதில் சிட்டி ரோலில் நடித்தது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அல்ல. அந்தப் படத்தில் ரோபோவாக நடித்தது பாரதிராஜாவின் மகனான மனோஜ் தான்! மனோஜ் நடிகராக மட்டுமல்லாது, பல படங்களிலும் உதவி இயக்குனராகவும் பணி செய்துள்ளார். மனோஜ்க்கு சினிமாவில் நல்ல ஒரு இண்ட்ரோ கொடுக்க விரும்பிய பாரதிராஜா, தன் மகனை ஹீரோவாகப் போட்டு தாஜ்மகால் என்னும் படத்தை இயக்கினார். இதில் ரியா சென் ஹீரோயினாக நடித்தார். இந்தப்படத்தில் பாடல்களும் பெரிய ஹிட் ஆகின.
தொடர்ந்து வருசமெல்லாம் வசந்தம், சமுத்திரம், கடல்பூக்கள், வாய்மை என பல படங்களில் நடித்தாலும், ஹீரோவாக ஜொலிக்க முடியவில்லை. மனோஜ் நந்தனா என்ற பெண்ணை காதலித்து கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இப்போது மனோஜ், தன் காதல் மனைவி நந்தனா மற்றும் இருமகள்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவிவருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அடடே, பாரதிராஜா பேத்திகளா இது? என கமெண்ட் செய்து வருகின்றனர்.
pic1
pic2