அடேங்கப்பா நடிகை சரண்யா பொன்வண்ணன் டீச்சரா? தன் மாணவிகளுடன் அவர் பிறந்தநாள் கொண்டாடியதை பாருங்க..!
ஆச்சி மனோரம்மாவுக்குப் பின் தமிழ் சினிமாவில் நல்ல அம்மா கேரக்டர் என்றால் அனைவருக்குமே சரண்யா பொன்வண்ணன் தான் நினைவுக்கு வருவார். நாயகன் படத்தில் கமலுக்கு ஹீரோயினாக நடித்தவர் இப்போது அம்மா கேரக்டர்களில் வலம் வருகிறார். ஆனால் உலகநாயகன் கமல்ஹாசன் இன்னும் கூட ஹீரோவாக நடித்து ‘விக்ரம்’ ரீலீஸாக உள்ளது. . பல முன்னணி நடிகர்களுக்கும் அம்மாவாக நடித்து அம்மணியில் கால்ஷீட் கிடைப்பதே இப்போதெல்லாம் பெரிய விசயம் ஆகிவிட்டது.
அதுமட்டும் இல்லாமல் சரண்யா பொன்வண்ணனை அம்மா கேரக்டருக்கு அழகாக காட்டிய படம் ‘எம்டன் மகன்’ அதன் பின்னே அவருக்கு அம்மா ரோல்கள் வரிசை காட்டியது. சீரியல் இயக்குனர் திருமுருகன் இயக்கிய இந்தப்படம் தான் சரண்யா பொன்வண்ணனை பெரிய அளவில் பேச வைத்தது.
சரண்யா, வில்லன் மற்றும் குணச்சித்திரப் பாத்திரத்தில் நடிக்கும் பொன்வண்ணனைத் திருமணம் செய்துள்ளார். இந்தத் தம்பதிகளுக்கு பிரியதர்ஷினி, சாந்தினி என இருமகள்கள் உள்ளனர். இதில் சாந்தினுக்கு அண்மையில் நிச்சயதார்த்தம் சென்னையில் வைத்து நடந்தது. சரண்யா பொன்வண்ணனுக்கு பேஷன் டிசைனிங் என்றால் கொள்ளைப்பிரியம்.
சென்னையில் ஒரு பேஷன் டிசைனிங் இன்ஸ்டியூட் வைத்திருக்கும் அவர், அதில் பாடமும் நடத்துகிறார். அந்த இன்ஸ்டியூட்டில் உள்ள மாணவிகளோடு சேர்ந்து அண்மையில் சரண்யா பொன்வண்ணன் தன் பெர்த்டேயைக் கொண்டாடி இருக்கிறார். அந்தப் புகைப்படங்கள், காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.