முத்து படத்தில் நடித்த 90ஸ் நாயகியா இது…. தனது மகனுடன் எப்படி இருக்கிறார் பாருங்க….

நடிகை விசித்ரா, குணச்சித்திரம், நகைச்சுவை காட்சிகளில் அதிகம் நடித்துள்ளார். சில படங்களில் எதிர் நடிகையாகவும் நடித்துள்ளார். அந்தக் கால நகைச்சுவை நடிகர்களான கொண்டமணி, செந்தில் ஆகியோருடன் சேர்ந்து நடித்துள்ளார். இவர் ஒரு உளவியல் நிபுணர் கூட.

நடிகை விசித்ரா படங்களில் மட்டும் அல்லாமல் நாடகங்களிலும் நடித்து பிரபலமடைந்தார். ஆனாலும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் வெளிவந்த முத்து படத்தில் கொண்டமணியுடன் சேர்ந்து நடித்திருப்பார். இந்த படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்ததன் மூலம் மக்கள் இடத்தில் ஒரு நீங்கா இடம் பிடித்துள்ளார்.

பிறகு, இவர் 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இதன் பிறகு படங்களில் நடிப்பதை முற்றிலும் விட்டு விட்டார். திருமணம் ஆகிய இவருக்கு மூன்று மகன்கள் இருக்கிறார்கள்.

அண்மையில், நடிகை விசித்ரா தனது மகனுக்காக தலைக்கவசம் வாங்குவதற்கு கடைக்கு சென்றுள்ளார். அங்கு தனது மகனுடன் சேர்ந்து எடுத்த வீடியோவை தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த வலைதளவாசிகள் இது இவருடைய மகனா??? என்று ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.

You may have missed