“பசங்க” படத்தில் நடித்த பையனா இது…. சூப்பர் ஹீரோவாக மாறிட்டாரே….. கண்ணு வைக்கும் ரசிகர்கள்….

அந்த காலத்தில் இருந்து தற்போது வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த படமாக இருப்பது பசங்க. இப்படத்தில் அதிகமாக குழந்தைகளின் சுட்டித்தனங்களே காட்டப்பட்டிருக்கும். இந்த படத்தை இயக்குனர் பாண்டியராஜ் இயக்கினார். குழந்தைகள் நடிக்கும் பள்ளிகால படங்கள் என்றால் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையாகவே தற்போது வரை இருக்கிறது.

பசங்க படத்தில் நடித்திருக்கும் நான்கு பேர்களில் அன்புவாக நடித்திருப்பவர் கிஷோர். இவருக்கு 2009 ஆம் ஆண்டுக்கான மாநில விருது கிடைத்துள்ளது. சிறந்த திரைக்கதை விருது , சிறந்த திரைப்பட விருதும் பசங்க படத்திற்கு கிடைத்துள்ளது.

அண்மையில் 2009ஆம் ஆண்டிற்கான சிறந்த மாநில அரசின் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் நிறைய பேர் கலந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் கிஷோருக்கு பசங்க படத்தில் நடித்ததற்காக விருது வழங்கப்பட்டது. விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிஷோரை பார்த்து அனைவரும் ஆச்சாரப்பட்டுள்ளனர். காரணம், அப்போது சின்ன பையனாக இருந்த இவர் தற்போது நன்றாக வளர்ந்து ஹீரோ போல் காணப்பட்டதே ஆகும். கிஷோரின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.