90’ஸ் களில் பிரபலமான நடிகர் மெளலியின் மகளா இது..? இவங்களும் பிரபலம் ஆச்சே..!

நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவர் மெளலி. பிஸ்தா படத்தில் நக்மாவின் அப்பாவாக இவரது நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது. இவர் நடிகர் மட்டுமல்ல, இயக்குநரும் கூட. இவர் 1980 ஆம் ஆண்டு வெளியான ‘மற்றவை நேரில்’ என்னும் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார்.

       இவர் இயக்கிய சில படங்கள் மெகா ஹிட்டும் ஆகியது. அதில் கமல்ஹாசன் நடித்த பம்மல் கே சம்பந்தமும் ஒன்று. இவர் ரவுடி போலீஸ், நன்றி மீண்டும் வருக, ஒரு வாரிசு உருவாகிறது, வா இந்தப் பக்கம் உள்பட பல படங்களையும் இயக்கியுள்ளார். அபூர்வ சகோதரர்கள் தொடங்கி, மூக்குத்தி அம்மன் வரை பல படங்களிலும் நடித்திருக்கும் மெளலி , இப்போது சின்னத்திரையிலும் குணச்சித்திர வேடங்களீல் வெளுத்து வாங்கி வருகிறார். இவர் மேடை நாடகக் கலையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். அந்தவகையில் ஆந்திரா, மேற்கு வங்கத்தில் 4000 மேடை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். 

   கலைமாமணி விருதையும் 1985 ஆம் ஆண்டே பெற்றுவிட்டார் மெளலி. இவரது மகளின் பெயர் ஷ்ரவந்தி. இவர் பிரபல கர்நாடக இசைப்பாடகியும் கூட. இப்போது நடிகர் மற்றும் இயக்குனர் மெளலியின் மகளின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. 

pic1

pic2

You may have missed