பெண்கள் கட்டி அணைபதில் எத்தனை வகை இருக்கு தெரியுமா..? ஒவ்வொரு வகைக்கும் அர்த்தம் உண்டு.. வாங்க தெரிஞ்சுக்கலாம்..!

வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படத்தில் கமலஹாசன் எல்லாரையும் கட்டியணைத்து ஆறுதல் செய்வாரே அதேபோல் கட்டியணைத்து தான் பலரும் அன்பைக் காட்டுகிறோம். அதே நேரம் ஆண் கட்டியணைப்பதில் இருந்து, பெண்ணின் அணைப்பு முற்றாக மாறுபட்டது. ஆம் அவர்களின் ஒவ்வொரு கட்டியணைப்புக்கும் ஒரு அர்த்தம் உண்டு.

வேகமான கட்டியணைப்பு..

காதலியோ, மனைவியோ கட்டிப்பிடிப்பதில் வேகம் இருந்தால் அவர்கள் மேல் தப்பு இருப்பதாக அர்த்தம். நீங்கள் அவர்க்ளை திட்ட நினைத்ததை அவர்களே திட்டிக் கொள்வார்கள். முகத்தைப் பார்த்தாலே பால் வடிவது போல் வைத்துக் கொள்வார்.

ஆறுப்படுத்துதல்

அவர்களின் வலி, வேதனை, துயரின் போது இந்த கட்டியணைப்பு நடக்கிறது. யார் மீது அதீத நம்பிக்கை இருக்கிறதோ அவரை இப்படி கட்டிப்பிடிப்பார்கள். அது காதலன்,நண்பன், குடும்ப உறவு என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஒருபக்கமாக கட்டியணைப்பது..

இப்படி உங்கள் காதலி கட்டிப்பிடித்தால் நீங்கள் ரொம்பவே எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அவர்களிடம் அன்பாக பேசி அவர்கல் மனதில் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என உறுதி செய்துகொள்ள வேண்டும். சில நேரங்களில் புது காதலன் கிடைத்துவிட்டதன் அறிகுறியாகவும் இது இருக்கலாம்.

பின்பக்கம் இருந்து கட்டிபிடிப்பது..

பெண்கள் தங்கள்கவனத்தை ஈர்க்க இப்படிக் கட்டிப்பிடிப்பார்கள். இப்படி கட்டிப்பிடித்துக்கொண்டே உங்கள் மடியிலும் அமர்வார்கள். அப்படியே ஐஸ் வைத்து உங்களிடம் பெரிய பொருள் ஒன்றையும் கேட்பார்கள்.

டெடிபியர் கட்டிப்பிடிப்பு..

பெண்கள் டெட்டிபியரை கட்டியணைத்து அதிகம் தூங்குவார்கள். வெகுநாள் கழித்துவந்த நண்பனைக் காணும்போது இந்த உணர்வு இருக்கும்.

தோளோடு சேர்த்து பின்பக்கமாக கட்டியணைப்பு..

தவறு செய்தால் இவர்கள் தங்கள் ஆதரவாளர்களை தேடிக்கொள்வதில் கைதேர்ந்தவர்கள். இவர்கள் உங்கள் புற மார்பகத்தோடு பட்டும் படாமலும் கட்டியணைப்பார்கள். இவர்களுக்கு சோகமான முகமும், அழுகையும் கூட இருக்கும்.

இனி காதலர்களே கொஞ்சம் உஷாராக கேண்டீல் செய்யுங்க..

You may have missed