ரொமான்ஸில் சினிமாவையே மிஞ்சிட்டாங்க இந்த ஜோடி.. மேகம் கருக்காத பாடலுக்கு நிச்சயதார்த்தத்தில் க்யூடாக ஆடி சொந்தங்களை அசரவைத்த ஜோடி..!
திருமண வீடுகளில் முன்பெல்லாம் கலாச்சார நிகழ்வுகளுக்குத் தான் அதிக முக்கியத்துவம் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் திருமண வீடுகள் டேன்ஸ் கிளப்பாகவும் மாறிவருகின்றது. இதுவும் அப்படியான ஒரு விசயம் தான்! அட ஆமாங்க. இப்போதெல்லாம் என் திருமணத்தில் நான் எப்படி ஆடியிருக்கேன் பாருங்கள் என மணப்பெண்கள் தாங்களே வீடியோவே போஸ்ட் செய்வதும் பேஷன் ஆகிவிட்டது.
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர். திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்துவிடுகிறது.
இதனால் இப்போதெல்லாம் திருமண வீடுகள் செம ஜாலியாக இருக்கிறது. தற்போது திருமண நிச்சயதார்தமும் ஜோடிகள் வித்தியாசமான முறையில் நடத்துகின்றனர். அந்த வகையில் இளம் ஜோடி ஓன்று திருசிற்றம்பலம் திரை படத்தில் வந்த மேகம் கருக்குது பெண்ணே பெண்ணே பாடலுக்கு அற்புதமாக நடனம் ஆடியுள்ளனர். தற்போது அந்த காணொளி இணையத்தில் பரவிவருகின்றது.