புஷ்பா பாட பாடலுக்கு அல்லு அர்ஜுன் போல் வெள்ளந்தியாக ஒரு கையை தூக்கி ஆடிய குட்டி தேவதை… எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி..!

child_dance_pushba_song

குழந்தைகளின் உலகம் மிக, மிக அலாதியானது. வாயில் இருந்து தவற விடும் வார்த்தைகள்கூட குழந்தைகளால் அழகாகிறது. அதனால்தான் அவைகூட நம்மால் வெகுவாக ரசிக்க முடிகிறது.

‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் குழந்தைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது.

இங்கேயும் ஒரு குட்டிதேவதை செய்த செயல் இணையத்தில் தீயாகப் பரவிவருகிறது. அப்படி, அவர் என்ன செய்தார் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். அண்மையில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என எல்லா ஏரியாவிலும் அதிரிபுதிரி ஹிட் ஆனது. இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று டிவியில் ஓடிக்கொண்டு இருந்தது. அப்போது வீட்டில் இருந்த குழந்தை அந்த பாடலில் வரும் அல்லு அர்ஜூனைப் போலவே தன் ஒரு கழுத்தைக் கொஞ்சம் தூக்கி வைத்துக்கொண்டு செம க்யூட்டாக ஆடிக் கொண்டு இருக்கிறது. இந்தக் குட்டி தேவதை செய்யும் செயல் இணையத்தில் செம க்யூட்டான ரியாக்சனை ஏற்படுத்தியுள்ளது. இதோ நீங்களே பாருங்களேன்.

You may have missed