பிச்சைக்காரன் படத்தில் நடித்த இவரை நியாபகம் இருக்கிறதா? இப்போது என்ன செய்கிறார் தெரியுமா..!

     தமிழ் சினிமா யாரை உச்சத்தில் வைக்கும்? யாரைக் கீழே கவிழ்த்திவிடும் என்பது யாராலும் கணிக்க முடியாத விசயம். சாதாரணமாக கண்டக்டராக இருந்த ரஜினியை புகழின் உச்சிக்கே கொண்டு போன ரசிகர்கள் தான், சினிமாவுக்கே தயாராகி வந்த பலரையும் பீல்ட் அவுட் ஆக்கியிருக்கிறது. 

  கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் ரசிகர்களின் மனதில் ஏகோபித்த வெற்றியைப் பெற்றத் திரைப்படம் தான் பிச்சைக்காரன். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்த இந்தப்படம் பெரிய அளவில் ஹிட் அடித்தது. அந்த படத்தில் ஈஸ்வரின் கேரக்டரும் பெரிதாகப் பேசப்பட்டது. பார்ப்பதற்கு சந்திரபாபு போலவே இருக்கும் இவர், சந்திரபாபு கேரக்டர்களை மேடையில் செய்து மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர்.

  அவர் இப்போது தன் திரைப்பயண அனுபவங்களை பத்திரிகையாளரும், சினிமா இணை இயக்குனருமான புகாரியிடம் அவரது யூடியூப் சேனலுக்காக பகிர்ந்துள்ளார். அதில் அவர், “50 ரூபாய் சம்பளத்தில் க்ரூப் டேன்ஸராக என் சினிமா கேரியரைத் தொடங்கினேன். மேடைகளில் சந்திரபாபு ரோல் செய்துவந்தேன். அவரை இமிடேட் செய்து நடித்து, நடித்து அதுவே எனக்குப் பழமாகிப் போனது. இப்போது சந்திரபாபு வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்படும் படத்திலும் நடித்து வருகிறேன். சினிமாவுக்கு வந்திருக்காவிட்டால் நான் ரெளடியாகத்தான் அகியிருப்பேன். சந்திரபாபு கேரக்டரில் நடிக்கவைத்து என் நண்பன் தான் என் வாழ்க்கையை மாற்றினான். “என்று சொல்லும் சந்திரபாபு ஈஸ்வரின் திரையுலக அனுபவத்தை இந்த வீடியோவில் பார்க்கலாம்.