பச்சிளம் குழந்தையை வைத்து பாட்டி செய்த காரியம்… இணையத்தை அதிரவைத்துள்ளது…. அனுபவ சாலிகளால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்…!

paati_child_nzz

பிறந்த குழந்தைகள் பூவை போல் மென்மையானவர்கள் அவர்களை மிகவும் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். குழந்தை பெற்ற தாய் உடல் நலம் சரியாவதற்கு குறைந்தது ஒரு மாத காலம் பிடிக்கும். இதுவே சிசேரியன் என்றால் உடல் நலம் சரியாவதற்கு 90 நாட்கள் பிடிக்கும். அதுவரை குழந்தையை பராமரிப்பதற்கு அனுபவம் வாய்ந்த அம்மா மற்றும் பாட்டிமார்களால் மட்டுமே பாதுகாத்து கொள்ள முடியும்.

நாம் தற்போது நாகரிக மாற்றங்களால் மூட பழக்கவழக்கங்கள் அல்லது பழைய பஞ்சகம் என்று சில நல்ல காரியங்களையும் ஒதுக்கி வைக்கின்றோம். வயதில் மூத்தவர்கள் அல்லது அனுபசாலிகள் கூறும் கருத்துக்களை இப்போது உள்ள தலைமுறையினர் கண்டு கொள்வது இல்லை. அறிவியல் கண்டுபிடிப்புகள் முன்னேற முன்னேற நாம் இதெல்லாம் ஓல்ட் பேஷன் என்று முக்கியமாக கருதவேண்டியவற்றை எல்லாம் தட்டி கழித்து வருகிறோம் என்பதே உண்மை.

வீட்டில் உள்ள தாத்தா பாட்டிகள் கூறும் அறிவுரைகளை நாம் கேட்க தவறுகிறோம். அவர்கள் அனுபவத்தின் மூலம் உணர்ந்த சில விஷயங்கள் எல்லா காலத்திற்கும் பொருந்தும். அவர்கூறும் மருத்துவ குறிப்புகள் நம்முடைய தமிழரின் பாரம்பரிய பழக்கவழக்கங்களாக இருந்தவை. அதனால் தான் அவர்கள் மீண்டும் மீண்டும் சில குறிப்புகளை கூறி கொண்டே இருப்பார்கள். அவர்களை பழைய காலத்து மனிதர்கள் என ஒதுக்கிவிடாமல் அவர்கள் கூறுவதில் உள்ள கருத்துக்களை புரிந்து கொண்டால் அவர்கள் கூறும் அனைத்தும் எக்காலத்திற்கும் பொருந்தும் மருத்துவ குறிப்புகளாகவோ அல்லது வாழக்கையில் நாம் முன்னேற வேண்டிய படிகளாகவோ நிச்சயம் இருக்க கூடும் என்பதே உண்மை.

சில காலத்திற்கு முன்பு வரை இந்த அளவிற்கு மருத்துவமனைகள் பெருகவில்லை எப்போது ஓல்ட் ஏஜ் ஹோம் அதிகரிக்க தொடங்கியதோ அதில் இருந்தே மருத்துவமனைகள் பெருக ஆரம்பித்தன. காய்ச்சல், இருமல், ஜலதோஷம் வந்தாலே அவர்கள் உணவில் சில பாரம்பரியமாக கடைபிடித்து வந்த மருத்துவ குறிப்புகளை உடல் நலம் தேறும் வரை உணவில் சேர்ப்பார்கள். நமக்கும் அது மருந்து என்று தெரியாமலேயே உணவை உண்போம்.

இங்கு காணொலியில் ஒரு மூதாட்டி ஒருவர் முறத்தில் பச்சிளம் குழந்தையை கிடத்தி மூன்று முறை சூரியனை நோக்கி குழந்தையை காண்பிக்கிறார். இது குழந்தையை முதன் முதலாக சூரியனிடம் காட்டும் நிகழ்ச்சி. பிறந்த குழந்தைகளை காலையிலும், மாலையிலும் சூரிய வெளிச்சத்தில் காட்டுவது நன்று. வைட்டமின்- d கிடைப்பதற்காகவும் குழந்தையின் கண்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும் சூரிய ஒளியில் காண்பிக்கும் போது மஞ்சள் நிறம் மாறி வெள்ளை நிறத்தில் வரும். இதனை மூதாட்டி பாரம்பரியமாக செய்து வந்த சடங்கினை செய்துள்ளார்கள்.

You may have missed