தோசை சுடவும் வந்தாச்சு மிஷின்.. இனி வேலை இவ்வளவு ஈஸிதான்..!

    பொதுவாகவே தமிழர்கள் வீடுகளில் வாரத்திற்கு இரண்டு நாள்களாவது தோசை இருக்கும். தோசையைப் பிடிக்காதவர்களும் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனாலும் வீட்டில் தோசை சுடுவது என்றால் பெண்களுக்கு மிகவும் தொல்லையான விசயம் தான்.

  கால் கடுக்க வெகுநேரம் நின்று சுடவேண்டும் என்பதாலேயே பெண்கள் பலரும் தோசைக்கு பதில் இட்லியை விரும்புகிறார்கள். இட்லி என்றால் ஒரே நேரத்தில் எட்டுகூட அவித்துவிட முடியும். ஆனால் தோசையைப் பொறுத்தவரை அது கரிந்துவிடாமல் சுடுபவர் பக்கத்தில் நின்று பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். அதில் நிறைய சிரமங்கள் இருக்கிறது. இதனாலேயே இல்லத்தரசிகள், அதிலும் வேலைக்குச் செல்லும் பெண்கள் தோசையைப் பார்த்தாலே ஓடுகின்றனர்.

  ஆனால் அவர்கள் எல்லாம் நிம்மதி பெருமூச்சு விடும் விசயம் ஒன்று நடந்துள்ளது. தோசை சுடுவதற்கென்று பிரத்யேகமாக ஒரு மிஷின் வந்துவிட்டது. அது மிகவும் பக்குவமாக நமக்கு தோசை சுட்டுக் கொடுக்கிறது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.