தன் உரிமையாளரின் பைக்கைத் தொட்ட மகள்.. மாடுக்கு வந்த கோபத்தைப் பாருங்க..!
பொதுவாகவே வீட்டில் பசு மாடு இருப்பது அதிர்ஷ்டம் என சொல்வார்கள். அதனால் தான் பசுவை கோமாதா எனச் சொல்கிறோம். பசு மாடு மிகவும் பாசமாக பழகக் கூடியதும்கூட. மனிதர்களோடு நெருக்கமாக இருக்கும் பிராணிகளில் முதன்மையானது மாடு. டீ, காபி என எதைக் குடித்தாலும் அதற்கு மூலப்பொருளான பாலைக் கொடுப்பதால் பசு நமக்கு அன்னமிடும் விலங்கும் கூட.
அதேபோல் காளை மாட்டை விவசாயத் தேவைக்காக வளர்ப்பார்கள். காளை மாடுகள் வயலில் விவசாய வேலையை செய்வதுடன் ஜல்லிக்கட்டுப் போட்டியிலும் கலந்துகொண்டு அசத்துகின்றன. மாடுகளுக்கு ஐந்தறிவு என்பதாகத்தான் நாம் அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால் அவையும் பாசத்தில் மனிதர்களுக்கு இணையானது தான். அதிலும் காளை மாட்டை மதுரை சுற்றுவட்டாரத்தில் அதிகமானோர் வளர்த்து வருகின்றனர். அதில் இளம் பெண்களும் முக்கியத்துவம் கொடுத்து வளர்ப்பதும், ஜல்லிக்கட்டுக்கு கம்பீரமாக அவற்றை அழைத்து வரும் காட்சியையும் அண்மையில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் நாம் பார்த்தோம்.
இங்கேயும் அப்படித்தான். ஒருவர் தன் வீட்டில் பாசமாக ஒரு மாடு வளர்த்து வந்தார். அந்த மாடு, வீட்டு எஜமானார் மீதும், அவரது பொருட்களின் மீதும் மிகுந்த பாசத்தோடு இருந்தது. வீட்டு எஜமானாரின் டூவீலரின் மேல், அவரது மகள் விளையாட்டாகத் தட்டுகிறார். இதைப் பார்த்து செம டென்ஷன் ஆகிறது அந்த மாடு. அதனிடம் விளையாட்டுக்காட்ட மீண்டும், மீண்டும் பைக் மேல் கையை வைக்கிறார். ஒருகட்டத்தில் என் ஓனர் வண்டி மேலயா கைவைக்குற என மாடு, அந்த இளம்பெண்ணை நோக்கி சீறிவந்ததே பார்க்கலாம். இதோ நீங்களே இதைப் பாருங்கள்…