தங்களது ஆட்டத்தால் திருமண வீட்டையே திரும்பி பார்க்க வைத்த இளைஞர்கள்.. மலம பித்தா பித்ததே பாடலுக்கு போட்ட ஆட்டத்தை பாருங்க..!


மலம பித்தா பித்தாதே….. பாடலுக்கு சூறாவளியாக நடனம் ஆடிய இளைஞர்கள் வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றனர். திருமண நிகழ்ச்சிகளில் இப்போது கச்சேரிகள், ஆடல், பாடல் என திருமண நாள் அன்று முழுவதும் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் தான்.
மங்கள நிகழ்ச்சியான திருமணத்தில் வண்ண வண்ண ஆடைகளுடன் ஊரார், உறவினர்கள் முன்னிலையில் உறவுக்கார இளைஞர்கள், பெரியவர்கள், சிறியவர்கள் மற்றும் பெண்கள் என்று அனைவரும் அன்று மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள்.

திருமணம் நடைபெறுவதற்கு முன்பு மணமக்கள் இருவரும் நடன குழுவினருடன் இணைந்து நடனம் ஆடி கொண்டே வருவது தற்போது வாடிக்கையாகி விட்டது. மேல தாளத்துடன் திருமணம் முடிந்த பின்னர் கச்சேரியும் நடைபெறும். இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்களுக்கு பிடித்த பாட்டிற்கு நடனம் ஆடி அசத்துவார்கள். அந்த வருடத்தில் ஹிட் ஆன பாடல்கள் தவறாது இடம்பெறும்.

இங்கே திருமணத்தில் பங்குபெற்ற உறவினர்கள் முன்னிலையில் இரண்டு இளைஞர்கள் பீஸ்ட் பட பாடலான மலம பித்தா பாடலுக்கு நடனம் ஆடினர். இதில் பின்னால் நின்று ஆடிய ப்ளூ சட்டை வெள்ளை ஷூ அணிந்திருந்தவர் பக்கா மாஸாக ஆடினார். இவருடைய ஆட்டத்தை கண்டு பார்த்து ரசித்தவர்கள் விசில் அடிக்க…….. வயதானவர் நானும் ஆடவறேன் என்று கூட ஆட …..பெண் ஒருவர் அவரை ஊக்குவிக்கும் விதமாக நூறு ரூபாய் அவருடைய ஆடையில் அணிவித்து விட்டார்…… இப்படி சிங்கிளாக அனைவரையும் ஆடி கவர்ந்து விட்டார். இவருடைய நடனத்தை இங்கே காணலாம்..