காதலுக்காக ஷாஜகான் மும்தாஜிக்கு கட்டியது தாஜ்மஹால்… சமானிய மனிதர் கட்டியது… காலங்கள் கடந்தாலும் காதல் வாழும் என நிரூபித்த நிகழ்வு…!
உலகம் தோன்றிய நாள் முதல் ஆதாம்….ஏவாள்….. காலம் தொட்டு காதல் உலகத்தில் இருந்து வருகிறது. ஒருவருக்காக இன்னொருவர் செய்யும் செயல்கள் மூலமும், தியாகங்கள் மூலமும் ஒருவர் தனது துணையின் மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பது தெரியும்.
அன்பு, பாசம், காதல் இல்லாத மனிதர்கள் இல்லை. இவற்றோடு பின்னிப்பிணைந்தது தான் வாழ்கை. வாழ்நாள் முழுக்க ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு, விட்டுக்கொடுத்து, அன்புடனும் மண்ணில் இருந்து மறையும் வரை பிரியாமல் வாழ்ந்து காட்டுவதே காதல்.
இருசன் என்பவர் தான் கட்டிய புது இல்லத்தில் தன்னுடைய மனைவிக்காக சிலை வைத்துள்ளார். இவரின் இந்த செயல் சமூகவலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. 24 ஆண்டுகள் திருமண வாழ்வில் ஒன்றாக இன்ப, துன்பத்திலும் பங்கேற்று ஒளி விளக்காக வாழ்க்கையின் முக்கிய அங்கமாக விளங்கிய மனைவிக்கு நினைவு சின்னமாக அவருடைய சிலையை புது வீட்டில் அமைத்துள்ளார். இருசன் என்பவர் நீலா என்ற பெண்ணை கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர். இவர்களின் முதல் மகளுக்கு திருமண நடந்துள்ளது. இளைய மகள்கள் இருவரும் கல்லூரி படித்து வருகின்றனர்.
வீட்டில் அடிப்படை வசதிகள் இல்லாத போதிலும் மகிழ்ச்சியாக வாழ்கை நடத்தியுள்ளனர். இந்நிலையில் அவருடைய மனைவியை இரவு நேரத்தில் பாம்பு ஓன்று தீண்டியுள்ளது. இதில் அவர் பரிதாபமாக இறந்துள்ளார்.
இந்த அசம்பாவிதத்திற்கு பிறகு இதுபோல் வீட்டில் வேறு யாருக்கும் நேர்ந்து விட கூடாது என்பதில் கவனமாக செயல் பட்டுள்ளார். அதனால் புதிதாகஅடிப்படை வசதிகளுடன் உடைய வீடு ஒன்றை கட்டி அதில் துன்பத்திலும் உடன் இருந்த மனைவியின் நினைவாக சிலை ஒன்றை வீட்டின் வரவேற்பறையில் நிறுவியுள்ளார். இந்த நிகழ்வானது பலரின் மனதையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
சிலை வடிவமைப்பதற்காக சென்னையில் உள்ள நிறுவனத்தின் மூலம் தனது ஆசையை நிறைவேற்றியுள்ளார். சிலை வடிக்கும் தகவல்களை இணையத்தின் மூலமும், தொலைக்காட்சியின் மூலமும் அறிந்துகொண்டதாக தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வானது சேலம் மாவட்டம், மாமாங்கம் பகுதியில் உள்ள கீழாகாட்டில் நடைபெற்றுள்ளது.இவரின் காதல் வாழக்கையை பலரும் பாராட்டி அதிசயித்து வருகின்றனர். இன்பத்திலும், துன்பத்திலும் உடன் இருந்த மனைவியின் மேல் கொண்ட அன்பை நினைவுகூர்ந்து அவரின் இழப்பை சிலையாக வடித்த இவரை சமூக வலைத்தளத்தினர் பாராட்டி வருகின்றனர்