குக் வித் கோமாளி ஸ்ருதி இவருக்கு இவ்வளவு பெரிய மகனா..? புகைப்படம் பார்த்து வியந்த போன ரசிகர்கள்…!

செல்லமே செல்லம் என்றாயடி..அத்தான் என்றே சொன்னாயடி’ என்ற பாடல் ஒருகாலத்தில் இளைஞர்களின் கனவுப்பாடலாக இருந்தது. அந்த பாடலுக்கு ஆடி கவனிக்க வைத்தவர் நடிகை ஸ்ருதிகா.

இந்த ஸ்ருதிகா வேற யாரும் இல்லைங்க. பழையகால நகைச்சுவை நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்திதான் இவர். அதனால் அவருக்கு 13 வயதிலேயே ஹீரோயின் சான்ஸ் தேடி வந்தது. ஆனாலும் தன் மகளுக்கு நாயகியாக நடிக்கும் அளவுக்கு பக்குவம் இல்லாத வயது என அவரது பெற்றோர்கள் அதற்கு தடை போட்டனர். ஆனால் விடாமல் தயாரிப்பாளர்கள் துரத்த, தன் 14 வயதில் சூர்யாவின் ஸ்ரீ படத்தில் ஹீரோயினாக நடித்தார். தொடர்ந்து ஆல்பம், மாதவன் நடித்த நளதமயந்தி, தித்திக்குதே படங்களிலும் நடித்திருந்தார்.
தொடர்ந்து தீவிர படிப்பில் கவனம் செலுத்திய ஸ்ருதிகா, மலையாளத்திலும் ஸ்வப்ணம் கொண்டு துலாபாரம் என்னும் படத்தில் நடித்திருந்தார். இப்போது ஸ்ருதிகாவுக்கு 36 வயதாகிறது. ஆனால் அப்போது ஸ்ரீ படத்தில் பார்த்ததைப்போலவே இப்போதும் உடம்பை மெயிண்டைன் செய்கிறார் ஸ்ருதிகா. கூடவே இப்போது விஸ்காம் பட்டதாரியாகவும் இருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பின்பு குக் வித் கோமாளி ஷோவில் சீசன் மூன்றில் போட்டியாளராக வந்தார் ஸ்ருத்திகா. ஸ்ருத்திகா இப்போது முதன் முதலில் தன் மகனோடு இருக்கும் புகைப்படத்தை தன் சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த நெட்டிசன்கள் அடடே ஸ்ருத்திகாவின் மகனா இது? ஸ்ருத்திகாவே இன்னும் இளமையாக இருக்கிறார். அவர் மகன் இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டாரா? என கமெண்ட் செய்து வருகின்றனர்.
pic1
