எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத குட்டிக் குழந்தையின் மனதைக் கவரும் நடனம்.. பல மில்லியன் பேர் ரசித்த காட்சி..!

ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தாலும் அது ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடே ஆகாது என்பார்கள். அதைத்தான் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்களின் மழலைச் சொல்லை கேட்காதவர் என வள்ளுவரும் பாடுகிறார்.

குழந்தைகள் சின்னதாக ஏதாவது செய்தாலும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு அது பேரானந்தமாக மாறிவிடுகிறது. கள்ளம், கபடமற்ற குழந்தைகளின் செய்கைக்கு முன்னால் இந்த உலகில் எதுவுமே பெரிய விசயம் இல்லை

குழந்தைகளின் செயல் எத்தனை முறை பார்த்தாலும் போரே அடிக்காதது. குழந்தைகளின் சிரிப்பு, சங்கீதத்தைவிடவும் இனிமையானது. அது அதை உணர்ந்தோருக்கு மட்டுமே தெரியும். இங்கேயும் அப்படித்தான் திரைப்படப் பாடல் ஒன்றுக்கு வாய் அசைக்கும் குழந்தை அப்படியே தானே பாடுவதுபோல் நடித்து ஆச்சர்யம் ஊட்டுகிறது. இந்திப்பாடல் ஒன்றுக்கு அது அழகாக வாயையும், மெலிதாக உடலையும் அசைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.