இவங்கதான் ரியல் 90ஸ் கிட்ஸ்.. திருமண மேடையில் கல்யாண ஜோடி மாலை போட சொன்னா ஸ்டோன் பெப்பர் விளையாடிட்டு இருக்காங்க பாருங்க… கடைசியில் யாரு ஜெயிச்சா பாருங்க..!

வட இந்தியாவில் வரவேற்பு நிகழ்ச்சியின் போது மணமகன் மற்றும் மணமகள் இருவருக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி மேடையில் வைத்து நடைபெறும் அப்போது அவர்கள் தங்களுடைய மாலையை மாற்றி கொள்வார்கள்.

அப்படியொரு திருமண வைபவத்தில் வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகன் மற்றும் மணமகள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்ற போது திருமண ஜோடிகள் இருவரும் ஸ்டோன்,பேப்பர், சிஸ்சர் விளையாட்டை விளையாடினர். இதில் மணமகள் பிரியங்கா ஷா வெற்றி பெற்றார். இதனால் அவர் முதலில் மாலையை மணமகன் ராகில் ஷா கழுத்தில் அணிவித்தார்.

இரண்டாவதாக மணமகன் மாலையை மணமகள் கழுத்தில் அணிவித்தார். இதில் மணமகன் மற்றும் மணமகள் இருவரும் ஒரே மாதிரியான வண்ணத்தில் உடை அணிந்திருந்தனர். இந்தக்காட்சியானது தற்போது சமூகவலைத்தளத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி வைரல் ஆகி வருகிறது. இதனை ‘வெட்டிங்க்வையர்’ இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.