இயக்குனர் சமுத்திரக்கனியுடன் நடித்திருக்கும் பிக் பாஸ் ஷெரினா… அதுவும் இந்த படமா..? இணையத்தில் வெளியன புகைப்படம்..!

bigg_boss_vinodaya_chittam_sherina_movie

இயக்குனர் சமுத்திரக்கனியுடன் ……. நடித்த பிக் பாஸ் மாடல் யார் தெரியுமா? மாடல் மட்டுமல்ல சிறந்த தொழிலதிபரும் கூட……

பிக் பாஸ்-6 கலகலப்பாகவும், விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பலரும் தங்களது தனித்துவத்தை காட்டி வருகின்றனர். ஜி.பி. முத்து அவர்கள் இடம்பெற்ற காரணத்தால் பிக் பாஸ் பார்க்காதவர்கள் கூட இந்த நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்தனர்.

இந்த நிகழ்ச்சில் விளம்பர மாடல், தொழிலதிபர் மற்றும் நடிகை என பல திறமைகள் கொண்ட ஷெரினாவும் பங்குபெற்றுள்ளார்.

இவர் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் பெங்களூரில். அவரது பூர்வீகம் கொச்சி, கேரளா. 1988,பிப்ரவரி 21-ம் நாள் பெங்களூரில் பிறந்து வளர்ந்துள்ளார்.இவருக்கு அம்மா, அப்பா ஒரு தங்கை உள்ளனர். இவர் பள்ளிப்படிப்பை முடித்ததும் விமான பைலட்டாக ஆக வேண்டும் என்று முடிவெடுத்தார்.

தற்செயலாக 2009-ம் ஆண்டு நடைபெற்ற பெமினா மிஸ் இந்தியா போட்டியில் தனது நண்பர்களின் தூண்டுதலால் பங்கேற்றவர் பெமினா மிஸ் சவுத் இந்தியாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.பின்னர் பல விளம்பரங்களுக்கு மாடலாக நடித்துள்ளார். அவற்றில் மலபார் கோல்ட், விஜயா மில்க், ஜிவி மில்ஸ், சென்னை சில்க்ஸ் போன்ற நிறுவனங்களின் விளம்பர படங்களில் நடித்துள்ளார்.

2015-ம் ஆண்டு வியூகா என்ற கன்னட படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு சமுத்திரக்கனியுடன் ஒரு விளம்பரத்தில் நடித்திருந்தார். இதனால் அவருக்கு சமுத்திரக்கனி இயக்கி நடித்த வினோதய சித்தம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இது 2021-ல் ஜீ-5 ஓடிடி யில் வெளியாகி, இந்த திரைப்படத்திற்கு நேர்மறையான கருத்துக்கள் கிடைத்தது. மேலும் அவரது தந்தையுடன் சேர்ந்து கார் ஸ்பேர் பார்ட்ஸ் விற்பனை தொழிலையும் நடத்தி வருகிறார். இப்படி அவர் பன் முக திறமை கொண்டவராக திகழ்கிறார்.அவரது புகைப்படங்கள் மற்றும் அவரது குடும்பத்தினருடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

pic1

pic2

pic3

You may have missed