இப்படி ஒரு டீச்சர் கிடைச்சா குழந்தைங்க ரொம்ப சந்தோசமா படிப்பாங்க… பலரின் மனதை கொள்ளை கொண்ட காணொளி..!

குழந்தைகள் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அவர்கள் முதன் முறையாக வீட்டை விட்டு தனியாக செல்லும் இடம் கல்விக்கூடம் தான். பள்ளிச்செல்லும் போது சில குழந்தைகள் ஆர்வத்துடன் செல்வார்கள் ஒரு சில குழந்தைகள் விருப்பமே இல்லாமல் இருப்பார்கள் அந்த குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்வதற்கு அடம் பிடிக்கும். அவ்வாறான குழந்தைகளும் விருப்பமுடன் செல்வதற்கு ஆசிரியர்கள் கனிவுடனும், அன்புடனும் வேடிக்கையாகவும் பாடத்தினை நடத்த வேண்டும். மேலும் அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தில் பள்ளிக்கூடம் செல்வதற்கு குழந்தைகள் பயப்படாமல் விரும்பி செல்வார்கள்.

இந்த வீடியோவில் உள்ளது போன்று ஆசிரியர் குழந்தையோடு குழந்தையாக மாறி விளையாட்டுடன் பாடம் கற்பித்தால் எந்த குழந்தையும் ஆசிரியரின் பேச்சை கேட்டு பாடத்தினை  புரிந்தகொள்ளும், மேலும் பள்ளிக்கூடம் செல்வதற்கும்  விருப்பப்படும்.

ஆசிரியர் ஒருவர் குழந்தைகளோடு குழந்தையாக மாறி உற்சாகமாக நடனம் ஆடி பாடத்தினை நடத்தும் விதம் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.குழந்தைகளும் சந்தோசமாக அவரை போன்றே நடனம் ஆடுகிறார்கள். பார்ப்பதற்கு ஆசிரியர் மகிழ்ச்சியாகவும், குழந்தைகளுடன் ஓன்றியும் கற்பிப்பது நன்றாக இருக்கிறது. 

You may have missed