இந்த மாதிரி கனவுகள் வருதா..? அப்போ நீங்களும் பணக்காரர் ஆகபோறீங்கன்னு அர்த்தம்.. கனவு பலன்…!

நாம் தூங்கும் போது நமக்கு கனவுகள் வரும். சில நேரங்களில் கண்ணை மூடி படுத்தலே பொதும், அப்போதும் கனவு வரும்….. அப்படி நாம் காணும் கனவு சில நேரங்களில் பலிக்கும். நாம் இப்போது கனவில் எதைக் கண்டால் அதிர்ஷ்டம் கைகூடும் என்று .பார்ப்போம்……
அதாவது நமக்கு பணக்காரராக வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் அதற்காக நாம் முயற்சியும் பண்ணியிருப்போம்….. இங்கே எதை கனவில் கண்டால் பணக்காரராகும் எண்ணம் நடுக்கும் என்பதை பார்ப்போம்…..

கம்மல்(காதணி):
காதில் அணியும் அணிகலன்களைக் கனவில் கண்டால், அந்த நாள் முதல் உங்களுக்கு வரும் வாய்ப்புகளை பயன்படுத்துங்கள். நிறைய பணம் கிடைக்கும் வாய்ப்பு இருக்கும்.

மோதிரம்:
உங்கள் கனவில் நீங்கள் மோதிரம் அணிவதாக கண்டால், மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். லட்சுமி தேவியின் அருள் உங்கள் மேல் உள்ளது என்று அர்த்தம்.
தங்கம்:
உங்கள் கனவில் தங்கத்தை கண்டால், நீங்கள் விரைவில் பணக்காரர் ஆகப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

விளக்கு:
கனவில் விளக்கை கண்டீர்கள் என்றால், உங்களை தேடி நிறைய பணம் வரப்போகிறது என்று அர்த்தம்.
பாம்பு:
நீங்கள் பாம்பை பணம் வைக்கும் பெட்டியின் அருகில் பார்த்தால் பண வரவு அதிகரிக்கும் என்பதுக்கு அறிகுறியாகும்.