ஆடத கால்களையும் ஆட வைக்கும் நையாண்டி மேளம்…. சும்மா கேட்டாலே அதிருதுல… பாணியில் இசையமைத்த நபர்..!
நாடுப்புற கலைகளுக்கென்றே தனி ரசிகர்கள் மற்றும் சங்கங்கள் உள்ளன. நாட்டுப்புற கலைகள் பெரும்பாலும் திருவிழாக்கள், கலைநிகழ்ச்சிகள் போன்ற முக்கியமான நாட்களில் நடைபெறும். ஊர் திருவிழாக்கள், கோவில் திருவிழாக்கள் மற்றும் தீபாவளி, பொங்கல் போன்ற சிறப்பு வாய்ந்த சமயங்களில் கிராமத்தில் நிச்சயமாக நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும். அதிலும் கோலாட்டம், கும்மியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், கும்பாட்டம் மற்றும் வில்லுப்பாட்டு,நையாண்டி மேளம் போன்றவை தவறாமல் நடைபெறும். இதிலும் குறிப்பிடத்தக்கது நையாண்டி மேளம். இது கரகம், காவடி ஆட்டம் மற்றும் பொய்கள் குதிரை ஆட்டம் போன்ற நடனங்களில் பின்னணி இசையாக கலைஞர்களின் நடனத்தை ஊக்குவிக்கும் பொருட்டு இசை இசைக்கப்படுகிறது.
நையாண்டி மேளம் குழுவாக சேர்ந்து வட்டமாக நின்று கொண்டு இசை அமைப்பார்கள். இது ஆடும் கலைஞர்களுக்கு உத்வேகத்தை கொடுத்து சலிப்படையாமல் ஆட வைக்கும்.
இங்கே ஒருவர் நையாண்டி மேளத்தை இசைப்பது கேட்பவரை ஆட வைக்கும் அளவு தனது திறமையால் கவர்ந்த்திழுக்கிறார். இசைக்கு வயதாவதில்லை…. வாசிப்பவருக்கும் வயதாவதில்லை…. என்பது போல் வயதானாலும் தங்களுடைய திறமையால் மக்களை கவர்ந்திழுக்கும் நுட்பம் இசைக்கு உண்டு என்பது இங்கு புலப்படுகிறது. இவரின் இசைக்கு தற்போது சமூகவலைத்தளவாசிகள் தங்கள் ஆதரவினை கருத்துக்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.