அரபிக்குத்துப் பாடலை வீணையில் வாசித்து அசத்திய இளம்பெண்…
அடடே என்ன அற்புதமான திறமைன்னு பாருங்க…!

                      இளைய தளபதி விஜய்க்கு ரசிகர்கள் இல்லாத தெருவே தமிழகத்தில் இல்லை என்று சொல்லலாம்.இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகனாக தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமான விஜய்….இப்போது விஜயின் அப்பா என தன்னை அறிமுகப்படுத்தும் அளவுக்கு புகழின் உச்சத்தில் இருக்கிறார்.

      நடிகர் விஜய் தனது ரசிகையான சங்கீதா என்பவரைத் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு பிள்ளைகள். இதில் விஜயின் மகளான திவ்யா வெளிநாட்டில் படித்து வருகிறார். இவர் பேட்மிட்டன் வீராங்கணையாவார். இப்போது அவரது மகன் வெளிநாட்டில் படிக்கிறார். தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அண்மையில் பீஸ்ட் திரைப்படம் வெளியானது. இந்தப்படம் கே.ஜி.எபின் ரிலீஸினால் கொஞ்சம் கலெக்சன் பாதிக்கப்பட்டாலும், வழக்கமான விஜய் பட வசூலுக்கு குறையொன்றும் இல்லை.

    பீஸ்ட் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் எழுதிய அரபிக்குத்துப் பாடல் பெரிய அளவில் ஹிட் ஆனது. அனிருத் இசையமைப்பில் இந்த பாடல் பட ரிலீஸூக்கு முன்பே பட்டி, தொட்டியெங்கும் ஹிட் அடித்தது. இப்போது இந்த பாடலை வீணை ஸ்ரீவாணி என்னும் பெண், வீணையிலேயே வாசித்து அசத்தியிருக்கிறார். இதை அனிருத்தே பார்த்தாலும் ஆச்சர்யப்படும் அளவுக்கு செம நேர்த்தியாக வாசித்து ஸ்ரீவாணி அசத்தியுள்ளார். இந்த வீடியோவை இதுவரை 26 லட்சம் பேர் பார்த்து வியந்துள்ளனர். இதோ நீங்களே இதைப் பாருங்களேன்.