அடடே பிரபல நடிகரின் மகனா இது? எவ்வளவு பதக்கம் வாங்கியிருக்கிறார் பாருங்க..!

பிரபல தமிழ் நடிகர் ஒருவரின் மகன் கழுத்து நிறைய மெடல்களுடன் இருக்கும் புகைப்படம் வைரல் ஆகிவருகிறது. அவர் யார் தெரியுமா? எதற்காக இவ்வளவு விருதுகள் வாங்கியிருக்கிறார் தெரியுமா? இதோ அதைத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

தமிழ்த்திரையுலகில் வில்லனாக அறிமுகமாகி, தொடர்ந்து கதாநாயகன் ஆனவர் சத்யராஜ். தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கி 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் தாக்குப் பிடிக்கிறார். இவரது மகன் சிபிராஜ் ஸ்டூண்ட் நம்பர் 1 படத்தின் மூலம் அறிமுகமானார். ஜோர், கோவை பிரதர்ஸ் என அப்பா_மகன் கூட்டணியில் தொடர்ச்சியாய் படம் வந்தாலும் சிபிராஜால் பெரிய ரசிகர் கூட்டத்தில் செல்ல முடியவில்லை.

சிறிய இடைவெளிக்கு பின்பு நல்ல கதையம்சம் கொண்ட படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்கத் துவங்கினார் சிபிராஜ். நாய்கள் ஜாக்கிரதை உள்ளிட்ட சில படங்கள் அதனால் நன்றாகப் போனது. சிபிராஜ்க்கும், ரேவதி என்பவருக்கும் கடந்த 2008 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்தத் தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். அதில் தீரன் என்ற மூத்த மகன் உள்ளார். அவ்ர்தான் இந்தக் கழுத்து நிறைய மெடல்களோடு இருக்கிறார். தீரன் இரு ஆண்டுகளுக்கு முன்பு புனேவில் நடந்த டேக்வாண்டோ போட்டியில் பங்குபெற்றுத் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். சிபிராஜ் மகன் தீரனின், இந்தத் தீரச் செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
