மாடலின் பெண்களுடன் உலகநாயகன் கமல்ஹாசன்… இணையத்தில் வைரலாகும் போட்டோஷூட் புகைப்படங்கள்..!

kamal_haasan_photo_shoot

இந்தியாவில் கதர் ஆடைகளுக்கென்று தனி வரலாறு இருக்கிறது. இந்தியாவை சாமானிய நாடாக கருதிய ஆங்கிலேயர்களுக்கு ஆடையில் புரட்சி செய்து பெரும் சவாலாக மாற்றி இந்தியாவை தற்சார்பு நாடாக மாற்றிய நிகழ்வு கதர் ஆடை புரட்சி.

நிகழ்காலத்தில் நெசவு தொழில் நலிவடைந்து வருகிறது. நெசவு தொழிலில் மூலம் கைகளால் செய்யப்பட்ட கதர் ஆடைகளுக்கு பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லாததால் நெசவு தொழிலின் மகிமை கடந்த ஆண்டுகளில் சரிவை கண்டுள்ளது. மேலும் நெசவு தொழிலாளர்களுக்கு போதிய வருமானம் கிடைக்காத காரணத்தால் வேறு தொழிலை செய்துவருகின்றனர். நம் இந்திய பாரம்பரிய உடையான கதர் ஆடை மக்கள் மனதில் இருந்து மெல்ல மெல்ல மறைந்து வருகிறது.

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் கதர் ஆடையை முன்னிறுத்திய சில செயல்களில் கவனம் பெற்றுள்ளார். பிக் பாஸ் நாயகன் கமல் அவர்கள் வார இறுதி நாட்களில் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு கதர் ஆடை அணிந்து வந்து மக்கள் மனதில் சிறு விதையை விதைத்தார். தற்போது மேலும் கதர் ஆடையை மீட்டெடுக்கும் முயற்சியாக கதர் ஆடையின் நவ நாகரிக வடிவத்தை மேலை நாடுகளுக்கும் பரப்பும் நோக்கத்தோடும், தற்போதைய தலைமுறை இந்திய பாரம்பரிய ஆடையின் மகிம்மையை புரிந்துகொள்வதற்கும், ஆடையின் தரத்தை உயர்த்துவதற்கும் அவர் புதிதாக ஆரம்பித்துள்ள “KH ஹவுஸ் ஆப் கதர் “பிராண்டை உருவாகியுள்ளார். இதனால் கதர் ஆடையின் உற்பத்தியை கூட்டுவதன் மூலம் நெசவு தொழிளார்களுக்கு மறுவாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கதர் ஆடை கைகளால் நெய்யப்பட்ட ஆடைகள் எல்லா காலத்திற்கும் ஏற்ற உடையாகும், குளிர் மற்றும் கோடைகாலங்களிலும் தாராளமாக அணிய முடியும். தற்போதுள்ள நவ நாகரிக மாற்றத்திற்கு ஏற்றாற் போல் ஆடைகள் புதுவித பரிணாமத்துடன் வெளிநாடுகளுக்கும் இதை அறிமுகம் செய்திருக்கிறார்கள். இந்த முயற்சியானது உலக நாயகன் கமல் மற்றும் டிசைனர் அமிர்தா ராம் அவர்களின் கூட்டு முயற்சியாகும். இது சிகாகோவில் ஆரம்பிக்கப்பட்டது.பின்னர் இந்தியாவில் குடியரசு தினத்தன்று நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இவர்களின் கூட்டுமுயற்சியால் செயல்படுத்தப்படும் கைத்தறி ஆடைகள் முழுக்க முழுக்க கைகளால் வடிவமைக்கப்பட்டவை. தேவைகள் அதிகரித்தால் புதிதாக நெசவாளர்களுக்கு பயிற்சியளித்து அதிக கதர் ஆடைகள் உருவாக்க முடியுமென்று டிசைனர் ராம் கூறியுள்ளார். இவ்வாறு கதர் ஆடையின் மகிமையை உலக அளவில் எடுத்து செல்வதற்கும், 2கே-கிட்ஸ் தலைமுறையினருக்கு தெரியப்படுத்தவும் கதர் ஆடையில் நவநாகரிக உடையணிந்து மற்ற மாடல்களுடன் போட்டோ ஷூட் நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். கதர் ஆடைகள் அனைத்து வித தட்ப வெட்ப காலங்களுக்கும் உகந்தது. தற்போது உள்ள நாகரிகத்திற்கு ஏற்றாற் போல் ஆடைகள் விற்பனை செய்யப்படுகிறது.ஆனால் இது கைகளால் நெய்யப்படுவதால் விலை சற்று அதிகம். கதர் ஆடையின் முக்கியத்துவத்தை இளைஞர்களுக்கு அறிமுகபடுத்துவதற்காகவும், காந்திய கொள்கையின் உண்மையான காரணத்தையும் இதன் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். உலக நாயகனின் மனதை கவரும் மாடர்ன் போட்டோஷூட் புகைப்படங்கள் இங்கே காணலாம்……

pic1

pic2

You may have missed