பக்தி பரவசத்தில் மெய் மறந்து கந்த சஷ்டி கவசம் பாடிய 100 கல்லூரி மாணவிகள்… கேட்டு பாருங்க சிலிர்த்து போவீர்கள்..!

bakthi_paravsam_padal_nzz

ஊரில் உள்ள கோவில்களிலும், அனைவரது வீடுகளில் காலை மற்றும் மாலையில் என்றும் ஒலிக்கும் பாடலாக இருப்பது கந்த சஷ்டி கவசம். சுப்பிரபாதம், கந்த சஷ்டி கவசம் வீடுகளில் ஒலிக்கும் போது வீடுகளில் நேர்மறையான அதிர்வலைகளை ஏற்படுத்தும். அன்றய தினம் மிகவும் உற்சாகமாகவும், நேர்மறை எண்ணங்களுடன் செய்லபட வைக்கும். நம் காதுகளுக்கு எங்கேணும் தூரமாக மெல்லிய ஒலியில் கேட்கும் சஷ்டி பாடலை கேட்டு நம் மனம் ஆனந்தம் அடையும், வேறு எண்ணத்தில் மூழ்கி இருந்தாலும் நம் உள்ளத்தில் ஊடுருவி நேர்மறை எண்ணங்களுடன் பாடல் வரிகளை கேட்க தூண்டும்.

ஆறு நாட்கள் கடைபிடிக்கப்படும் சஷ்டி விரதம் முருக பெருமானுக்கு மிகவும் உகந்த நாட்களாகும். அந்த நாட்களில் பகதர்கள் பய பக்தியுடன் விரதம் இருந்து கந்த சஷ்டி பாடலை பாராயணம் செய்வார்கள். முருகனிடம் பக்தியோடு வேண்டி கந்த சஷ்டி பாடலை பாராயணம் செய்து வந்தால் கேட்டது கிடைக்கும், எல்லா பிணிகளும்….. உள்ளத்திலும், உடலிலும் இருக்கும் பிணிகள் அகற்றி மேன்மையான வாழ்வு கிடைக்கும்.

கந்த சஷ்டி பாடலை உருவாக்கியவர் 19-ம் நூற்றாண்டை சேர்ந்த பாலதேவராயர் ஆவர்.திருச்செந்தூர் முருகனை வேண்டி மனமுருகி பாடல் இயற்றினார் . பள்ளி செல்லும் குழந்தைகள் பாடி வரும் போது அவர்களின் மூளை ஒருநிலை படுவதுடன், ஞாபக சக்தி அதிகரிக்கும், மூளையின் செயல் திறன் அதிகரிக்கும், பேச்சு குறைபாடுகள் நீங்கும். இந்த பாடலை நாம் மனம் உருகி பாடும் போது உடலில் நேர்மறையான அதிர்வலைகள் ஏற்படும்.கந்த சஷ்டி பாடலிலுல் ஒளிந்துள்ள அறிவியல் ரகசியங்கள் வேல்….. வேல்…. வெற்றிவேல் காக்கபோன்ற வரிகள் வேலின் முக்கிய துவத்தை குறிக்கிறது. …கந்த சஷ்டி பாடலில் வரும் கன்னம் மிரண்டும் கதிர்வேல் காக்க…..வடிவேல் இருதோள் வளம் பெற காக்க….. வரிகளை நாம் பாடும் போது நம்முடைய அந்த பாகங்களின் மேல் மூளையின் கவனம் பெரும்போது அந்த பகுதியில் இருக்கும் நோய்கள் அகன்று விடும் என்று அறிவியல் பூர்வமான நம்பிக்கை உள்ளது. தியானம் போன்று மனதை ஒரு நிலை படுத்துவதால் நம் மன அழுத்தம், மன சஞ்சலங்கள் அகன்றுவிடுகிறது. இங்கே ஒரு கல்லூரியில் உள்ள 100 மாணவிகள் ஆசிரியர்களின் வழிகாட்டுதலோடு கந்த சஷ்டி கவசத்தை அமைச்சர் சேகர் பாபு முன்னிலையில் பாடியுள்ளனர். அந்த காணொலியை இங்கே காணலாம்

You may have missed