நடிகர் சிவகார்த்திகேயனின் மனைவியா இது? ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டாங்களே.. வைரல் புகைப்படம்..!

   இளவயது, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என சகலதரப்பிலும் மிகப்பெரிய ரசிகர் படையை வைத்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தன் வாழ்வைத் தொடங்கிய சிவகார்த்திகேயன் இன்று உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார். விஜய் டிவி அவரது வாழ்க்கைக் கேரியரில் மிகப்பெரிய லிப்டைக் கொடுத்தது என்று சொல்லலாம். 

       சிவகார்த்திகேயனின் இந்த முன்னேற்றத்துக்கு அவரது விடாமுயற்சியும், தன்னம்பிக்கையுமே காரணம். சிவகார்த்திகேயன் ஹீரோ படத்தைத் தொடர்ந்து தற்போது டாக்டர் என்ற படத்தில் நடித்தார். அந்தப்படம் மெகா ஹிட்டானது. தொடர்ந்து, இப்போது சக்கரவர்த்தி இயக்கத்தில் அவர் நடித்த டான் திரைப்படமும் திரையரங்குகளில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கிறது. வசூலிலும் இந்த படம் சக்கரவர்த்தியாக அசத்துகிறது.

  சிவகார்த்திகேயன் இடையில் சில சொந்தப் படங்களை எடுத்து ரொம்பவே கையை சுட்டுக்கொண்டார். மீண்டும் இப்போது சினிமா நடிப்பிலேயே அவர் முழுக்கவனமும் செலுத்தி வருவது அவரது ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது. சிவாவுக்கு ஏற்கனவே ஆராதனா என்னும் மகள் உண்டு. இப்போது அவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருக்கிறது. அதுவும் ஆண் குழந்தை. அந்த குழந்தையோடு பொங்கலை உற்சாகமாக கொண்டாடிய புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். சிவகார்த்திகேயன், தன் இரண்டாவது மகனுக்கு குகன் தாஸ் என பெயர் சூட்டினார்.

 குழந்தை பெற்ற பின் பொதுவாகவே பெண்கள் கொஞ்சம் குண்டாவது வழக்கம் தான். அதற்கு சிவ கார்த்திகேயனின் மனைவி ஆர்த்தியும் விதிவிலக்க் இல்லை. இரண்டாவ்து குழந்தை பெற்ற பின் ஆர்த்தி, ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப் போயுள்ளார். இதைப் பார்த்ட நெட்டிசன்கள் அடடே ஆர்த்தியா இது? அடையாளமே தெரியலையே என கமெண்ட் செய்து வருகின்றனர். 

pic1

pic2