செந்தில், கவுண்டமணி காமெடியில் வரும் நடிகையா இவங்க.. தற்போது எப்படி இருக்காங்க பாருங்க..!

lalitha_kumari_pic_nzz

ஒரு காலத்தில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று அடம்பிடித்த நாயகி பின்னாட்களில் இந்த காட்சிகளில் நடித்ததால் தான் மக்களிடம் பரிட்ச்சயம் ஆனதாக தெரிவித்துள்ளார். 80-ஸ் மற்றும் 90-ஸ் காலகட்டங்களில் கவுண்டமணி…. செந்தில்…நடிக்கிறார்கள் என்றால் நகைச்சுவைக்கு பஞ்சமே இருக்காது. இவர்களின் கூட்டணியில் எந்த கதநாயகன் நடித்திருந்தாலும் அது கண்டிப்பாக நன்றாக ஓடும். இதனால் மக்களிடம் இவர்கள் நடிக்கும் படங்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கும்.

ஒரு படத்தில் ஒரு நாயகியை கருப்பு நிற வண்ணத்தை முகத்தில் அடித்து கொண்டு இதில் கவுண்டமணி தங்கையாக நடிக்க அழைத்துள்ளனர், ஆனால் அந்த நடிகை தான் கருப்பான தோற்றத்தில் தோன்றினால் மக்கள் விருப்பமாட்டார்கள் என்றும் அதில் அவரின் தோற்றத்தை பார்த்து மக்கள் அசிங்கமாக கருதுவார்கள் என்றும் நடிக்க மறுத்துள்ளார். ஆனால் இயக்குனர் ஒரு வழியாக சமாதானம் செய்து அவரை கவுண்டமணிக்கு தங்கையாக, செந்திலுக்கு மனைவியாக நடிக்க வைத்துள்ளார். அந்த திரைப்படத்தில் கவுண்டமணி தங்கைக்கு சிவப்பு வண்ணத்தில் பெயிண்ட் அடித்து இது தான் தன் தங்கையென செந்திலுக்கு அறிமுகப்படுத்துவார். தான் நிறம் குறைவாக இருப்பதால் மனைவியாக வரும் பெண் நல்ல நிறமாக இருக்கும் பெண் வேண்டும் என்று கவுண்டமணியிடம் செந்தில் கூறியிருப்பார். இதனால் அவர் தன்னுடைய தங்கைக்கு திருமணம் செய்ய வேண்டி சிவப்பு நிறத்தில் வண்ணம் தீட்டியிருப்பார். இந்த படத்தில் நடித்த இவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் மெகா ஹிட் படமான மாப்பிள்ளை திரைப்படத்தில் நடிகர் திலீப்பின் காதலியாக ரஜினியின் போலி மனைவியாக நடித்து அசத்தியிருப்பார். இந்த கதாபாத்திரத்தில் நடித்த நடிகை யார் என்றால் அவர் நடிகர் C.L.ஆனந்தன் மகளும், டிஸ்கோ சாந்தியின் தங்கையுமான லலிதா குமாரி.

லலிதா குமாரி வேறு யாரும் அல்ல வில்லன் நடிகர் பிரகாஷ் ராஜின் முன்னால் மனைவி ஆவார். இவர்களுக்கு 2 மகள்களும் 1மகனும் உண்டு. மகன் எதிர்பாராத விதமாக 2004-ல் தவறிவிட்டார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் தன்னுடைய மகன் இறந்ததை நினைத்து இன்னமும் வருந்துவதாக பத்திரிகை ஒன்றிற்கு விளக்கத்துடன் கூறியிருப்பார். மேஜை மீது காற்றாடி விட்டு கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அவர் கீழே விழுந்துள்ளார். அதில் அவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். அதில் சிகிச்சை பலனளிக்காமல் 2004-ல் தவறிவிட்டதாக தெரிவித்திருப்பார். மேலும் 2009-ல் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருது வேறுபாட்டால் விவாகரத்து வாங்கி விட்டதாகவும் தெரிவித்திருந்தார். அதன் பிறகு நடன இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

தற்போது லலிதா குமாரி அவர்கள் நகைசுவை நடிகை கோவை சரளாவுடன் பல ஆன்மீக பயணங்கள் மேற்கொண்டு அதை யூ-டியூபில் யாத்ரா டைம்ஸ் என்ற பெயரில் பதிவேற்றம் செய்து வருகிறார். மேலும் கலர்ஸ் தொலைக்காட்சியில் மெகா தொடர் ஒன்றை தயாரித்து வருகிறார். இவருடைய மகள்கள் மேற்படிப்பு படித்து வருவதாக தெரிவித்துள்ளார். அதற்கு அவரின் கணவர் பொறுப்புடன் குழந்தைகளை கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

You may have missed