சாக்லெட் பாய் மாதவனின் பிரம்மாண்ட வீட்டினை பார்த்துள்ளீர்களா..? இணையத்தில் பகிர்ந்த புகைப்படம்..!


நடிகர் மாதவன் “தி நம்பி எபெக்ட்” என்ற படத்தின் மூலம் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாரயணன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து அவரது புகழை நிலைநாட்டியுள்ளார்.தவறாக குற்றம் சாட்டபட்ட விஞ்ஞானி தன் வாழ்க்கையில் அனுபவித்த சவால்கள், வேதனைகள், வலிகள் போன்றவை தான் குற்றம் அற்றவர் என்பதை நிரூபிக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் பற்றியும் விளக்கியுள்ளது இப்படம்.

நடிகர் மாதவன் அவர்களின் முழு பெயர் பாலாஜி ரங்கநாதன் மாதவன்.இவர் 1970-ம் ஆண்டு ஜாம்ஷெட்பூர்,ஜார்கண்டில் -ல் பிறந்துள்ளார். இவரது தந்தை ரங்கநாதன் ஐயங்கார் , டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியாக பணியாற்றியுள்ளார். இவரது தாயார் இந்தியன் வங்கியில் மேலாளராக பணியாற்றியுள்ளார்.இவரது பெயர் சரோஜா. நடிகர் மாதவனுக்கு ஒரு தங்கை உள்ளார். அவரது பெயர் தேவிகா , இவர் மென்பொருள் பொறியாளர். நடிகர் மாதவன் B.sc எலெக்ரோனிக்ஸ் ராஜாராம் கல்லூரி கோலாப்பூரில் பயின்றுள்ளார். NCC-ல் பங்கேற்று இங்கிலாந்து சென்று அந்த நாட்டின் ராயல் கடற்படை, ராயல் விமானப்படை , இங்கிலாந்து இராணுவம் போன்ற இராணுவ அமைப்பின் மூலம் பயிற்சிகள் பெற்றுள்ளார். இராணுவத்தில் சேர்ந்து பணி புரிய இவரது வயது பூர்த்தி அடையாத காரணத்தினால் அவரால் இராணுவத்தில் பணியாற்ற முடியவில்லை. இவர் பொதுவெளியில் நன்றாக பேசும் பேச்சாளராக பல இளைஞர்களுக்கு ஊக்கப்படுத்தும் பேச்சாளராக் பணிபுரிந்துள்ளார். 1999-ம் ஆண்டு தனது நெருங்கிய தோழியான சரிதா பீர்ஜே- வை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு வேதாந்தத் என்ற மகன் உள்ளார். இவர் சர்வதேச நீச்சல் வீரர் ஆவார். இந்திய நாட்டின் சார்பாக பங்கேற்று பல பதங்கங்கள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மனைவி சரிதா ஆடை வடிவமைப்பாளராக இருக்கிறார். ‘குரு என் ஆளு ‘என்ற படத்தில் ஆடை வடைவமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.
நடிகர் மாதவன் பெரிய திரையில் நடிக்க வருவதற்கு முன்பு ஜீ-டிவி தொலைக்காட்சியில் தொடரில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.1998-ல் சாந்தி, சாந்தி,சாந்தி என்ற கன்னட நகைசுவை படத்தில் நடித்தார். அந்த படம் பெரிதாக ஓடவில்லை. அதன் பிறகு 2000-ம் ஆண்டு தமிழில் இயக்குனர் மணிரத்தினத்தின் படைப்பில் உருவான அலைபாயுதே படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ்நாட்டின் சாக்லேட் பாயாக மக்கள் மனதினில் இடம் பிடித்தார்.
தற்போது இறுதி சுற்று, விக்ரம் வேதா திரைப்படத்தின் மூலம் மாறுபட்ட கதைக்களத்தில் நடித்து மக்கள் மனதில் நிலைபெற்றுள்ளார். தற்போதும் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் பேச்சாளராக செயல்பட்டு வருகிறார். இளைஞர்கள் தங்களை எவ்வாறு மேம்படுத்திக்கொள்ள வேண்டும், எப்படி திறமையை வளர்த்து கொள்ள வேண்டும் என ஊக்கப்படுத்தும் உந்துகோலாக இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும் செயல்பட்டு வருகிறார். தன்னார்வ தொண்டுநிறுவனங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று சமூக பணிகள் செய்துவருகிறார். PETA அமைப்பின் முக்கிய நபராகவும் இருக்கிறார்.
நடிகர் மாதவன் மகாராஷ்டிராவில் உள்ள அடுக்கு மாடி வீட்டில் கூட்டு குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். வீட்டில் காய்கறி தோட்டங்கள், பழ செடிகள் போன்றவை வளர்த்துவருகிறார். இவற்றை தனது இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டு வருகிறார். நடிகர் மாதவன் இன்ஸ்டாகிராம் கணக்கில் 3மில்லியன் ரசிகர்களுக்கு மேலாக பின்பற்றுகிறார்கள்.

திரைத்துறையில் நடிகர் சூர்யாவும், நடிகர் மாதவனும் நல்ல நண்பர்களாக திகழ்கின்றனர். உலக நாயகன் கமலஹாசனிடமும் நட்பு வட்டத்தில் இருப்பதாகவும் அறியப்படுகிறது. இவர் சிறந்த பேச்சாளர், நடிகர், எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளர் போன்ற பன் முக திறமைகளோடு செயல்பட்டு வருகிறார். சென்னையில் வெள்ள பெருக்கு ஏற்பட்ட போது தொண்டு நிறுவனத்தின் மூலம் உதவிகள் புரிந்துள்ளார். பன் முக திறமைகள் கொண்ட மாதவன் அவர்களின் வீட்டின் அழகை இங்கே காணலாம்……அவரது வீட்டில் சில செல்ல பிராணிகளையும் வளர்த்துவருகிறார்
