கல்லூரி விழாவில் புடவையில் கண்களை கவரும் வகையில் மாணவர்கள் போட்ட ஆட்டத்த பாருங்க..!

kaatu_payale_dance_vi

நடனம் அனைவரையும் கவரும்……. அழகிய நடனம் அனைத்து உள்ளங்களையும் கொள்ளை கொள்ளும்…….. இசையோடு சேர்ந்த நடனம் கண்களுக்கு விருந்தாகவும், மனதிற்கு புத்துணர்ச்சியும் கொடுக்கும். இப்போது பரதநாட்டியம், வெஸ்டர்ன் டான்ஸ், பாப் டான்ஸ் என நடன பள்ளிகள் பல இடங்களில் செயல்பட்டு வருகிறது. விருப்பமுள்ள மாணவர்கள் தங்களுக்கு பிடித்த நடன துறையில் பங்கேற்று தங்கள் திறமைகளை வளர்ப்பதோடு சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து உலக அறிய செய்கின்றனர்.

கல்லூரி மற்றும் பள்ளி ஆண்டு விழா போன்ற முக்கியத்துவம் வாய்ந்த நாட்களில் நடனம் கண்டிப்பாக இருக்கும். நடனத்தில் விருப்பமுள்ள மாணவர்கள் பங்கேற்று அரங்கையே அதிர வைக்கும் அளவிற்கு தங்கள் திறமையால் அனைவரையும் கவர்ந்து விடுவார்கள். சமூக ஊடகத்துறை வளர்ச்சியால் தங்களுக்கு இருக்கும் திறமைகளை வெளி உலகுக்கு தெரியபடுத்துகின்றனர்.

இந்த காணொலியில் கல்லூரி மாணவிகள் தங்கள் கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்பதற்காக சூரரரை போற்று திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலான காட்டு பயலே…… பாடலுக்கு மாணவிகள் புடவையிலும், ஆண் வேடமணிந்து வேட்டி சட்டையில் பட்டய கிளம்பும் படியாக ஆடி அதிரவிட்டனர். அந்த காணொலி உங்களுக்காக இதோ……

You may have missed