கல்லூரி நிகழ்ச்சியில் மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர் போட்ட ஆட்டம்… ஒட்டு மொத்த அரங்கமே அதிர்ந்த தருணம்..!
நம்மளுடைய பள்ளிக் காலங்களில் நண்பர்களோடு சேர்ந்து நல்ல ஆட்டம் போடுவோம். சில சமயங்களில் வகுப்பறைக்கு முன் நின்று ஆட சொல்லுவார்கள் நம்மலும் நல்ல ஆடி பாடியிருப்போம். அந்த காலங்களை நினைத்துப் பார்த்தால் இன்றும் நம் கண்களில் கண்ணீர் வரும்.
பள்ளி வாழ்க்கையில் கிடைத்த நட்பு என்றும் ஒரு தனி உறவு தான். பள்ளியில் படிக்கும் போது நாம் கல்லூரிக்கு போனால் நாம் அனைவரும் பிரிந்து விடுவோம், பள்ளியில் கிடைத்த சந்தோசமான வாழ்க்கை கல்லூரியில் கிடைக்காது என்றெல்லாம் நினைத்திருப்போம். அது முற்றிலும் தவறு. கல்லூரி வாழ்க்கை நமக்கு நிறைய அனுபவங்களை தரும், பள்ளியில் உள்ள அனைத்தையும் விட கல்லூரியில் கிடைக்கும் வாழ்க்கை யாராலும் மறக்க முடியாத நினைவாய் தான் அமையும்.
பள்ளிகளில் ஆசிரியர்கள் சற்றே கோவம் காட்டுவார்கள். அதே சமயம் அக்கறையும் காட்டுவார்கள். கண்டிக்கவும் செய்வார்கள். ஆனால் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர்கள் ஒரு நண்பன் போல் பழகுவார்கள். சில நேரங்களில் நம்மைப் போன்றே ஒரு மாணவராக மாறி நம்மோடு நல்ல பேசுவார்கள்.
அதனால் தான் என்னவோ கல்லூரிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் மாணவர்களோடு ஆசிரியரும் சேர்ந்து ஆடி மாணவர்களை மகிழ்ச்சி செய்கிறார்கள். இந்த வீடியோவில் உள்ள ஆசிரியர் பாட்டுக்கு ஏற்ப தனது முக பாவனைகளை மாற்றி அழகாக ஆடுகிறார். கடைசியில் ஒரு மாணவரும் இவருடன் ஒரு ஸ்டேப் போட்டுள்ளார்.
சுற்றி இருந்த மாணவர்கள் சிரித்த முகத்துடன் பார்த்து ரசிக்கின்றனர். ஒருவேளை இந்த மாணவர்களின் இத்தனை சந்தோசத்தினை பார்ப்பதற்காகத்தான் இவர் ஆடினாரோ????? இந்த வீடியோவை பார்த்தவர்கள் தங்களுக்கு இப்படி ஒரு ஆசிரியர் கல்லூரி படிக்கும் போது கிடைக்கவில்லையே என்று கம்மெண்ட்களை போட்டு வருகின்றனர்.