கண்கள் துடிப்பது அதிர்ஷ்டமா அல்லது துரதிருஷ்டமா..? உண்மையான காரணம் இதுதான்..!

கண்கள் தான் நம் உடலில் இருக்கும் உறுப்புகளிலேயே மிகவும் முக்கியமானது. தெய்வ விக்கிரகங்களை, நம்மை இந்த உலகுக்கு தந்த பெற்றோரை, மனைவி, குழந்தைகளை, நண்பர்களை பார்க்க உதவுவதே கண்கள் தான்.

இந்த தலைமுறையினர் சதா சர்வநேரமும் பேஸ்புக், வாட்ஸப், வீடியோ கேம்கள் என விளையாடி செல்போனுக்குள் மூழ்கிக் கிடக்கின்றனர். இதனால் சிறுவயதிலேயே பார்வைக்குறைபாடுக்கும் ஆளாகின்றனர். அதேநேரம் கண்ணில் எவ்விதக் குறையும் இல்லாமலே சிலனேரம் நம் கண்கள் துடிக்கும். இதில் வலது கண் துடித்தால் கெட்டது, இடதுகந்துடித்தால் நல்லது என நாம் சொல்லிக்கொள்வோம்.

பொதுவாக கண்கள் துடிப்பது எப்போதாவது நடந்தால் பிரச்னையில்லை. அடிக்கடி நடந்தால் மூளை சம்பந்தப்பட்ட நோய்களும் வரக்கூடும். இதேபோல் உடலில் இருக்கும் புற நரம்புகளின் இயல்புக்கு மீறிய தூண்டலாலும் சிலநேரம் நரம்பு துடிக்கும்.

சரி இனி இதை அதிர்ஷ்ட வரிசையில்…எப்படித் துடித்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.

இடதுகண் இமை துடித்தால் கவலை என அர்த்தம். வலதுகண் இமை துடித்தால் சந்தோஷ செய்தி தேடிவரும் என அர்த்தம். இடதுகண் துடித்தால் மனைவியை பிரியும் அபாயம் உண்டு. அதனால் கவலை வரும். வலதுகண் துடித்தால் நினைத்தது நடக்கும். கண் நடுபாகம் துடித்தால் மனைவியை பிரியும் அபாயம் உண்டு. புருவ மத்தியில் துடித்தால் பிரியமானவருடன் இருப்போம் என அர்த்தம். இடது புருவம் துடித்தால் குழந்தை பிறப்பு இருக்கும். வலதுபுருவம் துடித்தால் பண வரவு எனவும் அர்த்தம்.