இரவில் துணையில்லாமல் இந்த ராசிக்காரர்கள் தூங்கவே மாட்டாங்க… எந்த ராசிக்காரர்கள் தெரியுமா?

என்னதான் பஞ்சு மெத்தையில் பணம் கொப்பளிக்கும் வீட்டில் இருந்தாலும் சிலருக்கு துணைக்கு பக்கத்தில் ஆள் இல்லாமல் தூக்கமே வராது. என்ன தான் பெரிய தைரியசாலியாக இருந்தாலும் இரவில் பக்கத்தில் ஆள் இல்லாவிட்டால் பலவீனமாக உணர்வார்கள். அதிலும் இந்த ராசிக்காரர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

துலாம்

காதலை வெளிப்படுத்துவதில் இவர்கள் வேற லெவல். வாழ்க்கைத்துணையிடம் மிகவும் நெருக்கமாக இருப்பார்கள். என்ன தான் சங்கடம் என்றாலும் இரவில் தனக்குப் பிடித்த துணையுடன் மன கஷ்டத்தை பகிர்ந்துகொண்டால் பறந்துவிடும் என நினைப்பார்கள்.

சிம்மம்

இவர்கள் தூங்கும்போதும் யாரேனும் அருகில் இருக்கவேண்டும் என உணர்வார்கள். திருமணத்திற்குப் பின்னர் துணையுடன் இருக்க அதிகம் விரும்புவார்கள். இவர்கள் தன் வாழ்க்கைத்துணை, குழந்தையோடு இருக்கும்போது மகிழ்வாக உணர்வார்கள்.

கடகம்

இவர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையுடன் நேரத்தை செலவிட விரும்புவார்கள். தூக்கத்திலும் துணையோடு சேர்ந்திருக்க விரும்ப்வார்கள். இரவில் அன்று முழுவதும் நடந்தவற்றை தன் வாழ்க்கைத்துணையுடன் பகிர வேண்டும் என நினைப்பார்கள்.

ரிஷபம்

இவர்கள் எப்போதும் துணையின் பாதுகாப்பை விரும்புவார்கள். பார்க்க ரொம்ப வாட்டசாட்டமாக வலுவானவர்களாக இருந்தாலும் நிஜத்தில் மிகவும் மென்மையானவர்கள். துணை பக்கத்தில் இல்லாவிட்டால் இவர்களுக்குத் தூக்கமே வராது.