இந்த குட்டீஸ் ஆடும் பரதநாட்டியத்த பாருங்க.. ஆடும் அழகினை பார்த்து ரசிக்க இரு கண்கள் போதாது..!

kutties_paratham_viddd

குட்டி தேவதை ஒன்று தன் அம்மா சொல்லச் சொல்ல பரதநாட்டிய அசைவுகளைச் செய்யும் காட்சி இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. இதுகுறித்துத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

இந்த உலகில் விலை மதிக்கவே முடியாதது குழந்தையின் புன்னகை தான். குழந்தைகள் எது செய்தாலும் அழகுதான். குழந்தைகளின் உலகமே மிகவும் சுவாரஸ்யம் ஆனது, குழந்தைகள் செய்யும் குறும்புத்தனங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தாலே நேரம் போய்விடும். அதனால் தான் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்களின் மழலை சொல்லை கேட்காதவர்கள் எனத் தொன்றுதொட்டு சொல்லப்படுகிறது.

குழந்தைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைகள் உற்சாகத்துள்ளல் போடுவார்கள். அதிலும் மூன்று வயதுவரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும். ‘அழகுக்குட்டி செல்லம் உன்னை அள்ளித்தூக்கும் போது..பிஞ்சு விரல்கள் மோதி’ எனத் தொடங்கும் பிரித்விராஜின் திரைப்பட பாடலில் குழந்தைகளின் அழுகை, சிரிப்பு என பல்வேறு கோணங்களையும் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும்.

குழந்தைகளின் செய்கைகளைப் பார்த்தாலே நமக்கு நேரம் போவதும் தெரியாது. எந்த கஷ்டமான சூழலில் நாம் இருந்தாலும் குழந்தைகளோடு இருந்தால் அந்த வலி பஞ்சாகப் பறந்து போகும். இங்கேயும் அப்படித்தான். இரண்டரை வயது மட்டுமே ஆன குட்டிக் குழந்தை ஒன்று, செம க்யூட்டாக பரத நாட்டியம் ஆடுகிறது. அந்தக் குட்டிக்குழந்தை தன் அம்மா சொல்லச் சொல்ல செம க்யூட்டாக பரதநாட்டிய அசைவுகளைச் செய்கிறது. இந்த வீடியோவை யூடியூப்பில் இதுவரை 46 லட்சம் பேர் பார்த்து வியந்துள்ளனர். குறித்த இந்தக் காட்சி இணையத்தில் அதிகம் பேரால் விரும்பப்படுகிறது. இதோ நீங்களே இதைப் பாருங்களேன். இரு கண்கள் போதாது…இந்த அழகினை ரசிக்க எனச் சொல்வீர்கள்.

You may have missed