இந்த ஐந்து ராசிகார பெண்களும் துரோகம் செய்தால் மன்னிக்க மாட்டார்கள்.. ஆண்களே உஷாரரா இருந்துக்கோங்க.. இது எச்சரிக்கைப் பதிவு..!

யாருக்கு துரோகம் செய்தாலும் தப்புதான். அதிலும் பெண்களுக்கு துரோகம் செய்தால் அது பெரும் சாபமாக மாறிவிடும். அதிலும் இந்த ஐந்து ராசிப் பெண்களுக்கு துரோகம் செய்தால் அதை அவர்கள் மறக்கவே மாட்டார்கள். அது யார் எனத் தெரிந்துகொள்வோம் வாருங்கள்..

தனுசு

இவர்கள் காதல் குறித்து பெரும் கனவில் இருந்தவர்கள். அதன் மாயை உடையும்போது அவர்களால் சகித்துக்கொள்ளவே முடியாது. இதன் தாக்கம் மீண்டும் வேறு எவர் ஒருவரையும் நம்பமாட்டார்கள். கூட்டாளரை வாழ்வில் இருந்து துரோகத்தை முன்னிறுத்தி இவர்கள் நிரந்தரமாக விலக்கி வைக்கும் வாய்ப்பும் அதிகம்.

மீனம்

இவர்கள் மிகவும் எச்சரிக்கையுடனே தங்கள் அன்புக்குரியவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். அவருக்கு அந்த மாதிரி அன்புக்குரியவராக, இணையராக நீங்கள் தேர்வாகிவிட்டால் இதயத்துக்கு மிக நெருக்கமாக உங்களை வைத்திருப்பார்கள். ஆனால் சிறு ஏமாற்றத்தையும் இவர்களால் தாங்கமுடியாது. மீண்டும் வாழ்வில் சேரவே வாய்ப்பில்லை என முடிவுக்கு வந்துவிடுவார்கள்.

விருச்சிகம்

நடக்கும் எதற்கும் படக்கென ரியாக்ட் செய்வார்கள். கண்ணை மூடிக்கொண்டு கடக்க மாட்டார்கள். ஏதாவது முரண் ஏற்பட்டு பிரிந்த இணையை மன்னிப்பார்கள். ஆனால் மீண்டும் சேர்ந்து வாழ மாட்டார்கள்.

மிதுனம்

ரகசியங்களை காப்பதில் கில்லாடி. அதேநேரம் தன் வாழ்கைத்துணை தனக்கு துரோகம் செய்தது தெரிந்தால் பலிவாங்கவும் தயங்க மாட்டார்கள். ஆனால் மன்னிப்பும், திரும்ப ஏற்றுக்கொள்ளும் தன்மையும் இவர்களுக்கு இருக்காது.

கன்னி

உறவு என்பது இவர்களுக்கு நம்பிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. ஈடுசெய்ய முடியாத அன்பை துணையின் மீது செலுத்தும் இவர்கள் சிறு துரோகத்தயும் தாங்கிக் கொள்ள மாட்டார்கள்.