அம்மா மடியில் தூங்கும் குழந்தை போல பாசமழை பொழியும் வாயில்லா ஜீவன்….

bull-loves-owner-cute-reaction-vid

விவசாயத்திற்கு பெரிதும் உதவியாக விளங்குவது ஆடு மற்றும் மாடுகள். கால்நடைகள் வளர்ப்பில் விவசாயிகள் தங்கள் வீட்டில் உள்ள உறவு போன்றே உரிமையுடன் பழகுவார்கள். விவசாயத்திற்கு பெரிதும் பயன்படும் விலங்கான மாடுகளில் பசு பால் வளத்திற்காகவும். காளைகள் நிலத்தை உழுவதற்கும் பெரிதும் இன்றி அமையாததாக இருக்கிறது. தமிழ் நாட்டில் காளைகளை ஜல்லிக்கட்டு போட்டிற்கு பயிற்சி அளித்து போட்டிக்கு தயார் படுத்தி வருவார்கள். தை மாட்டு பொங்கலை முன்னிட்டு மதுரை புதுக்கோட்டை, தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைப்பெறுவது வழக்கம்.

சென்னையில் படப்பையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வாயில்லா ஜீவன்கள் மனிதர்களிடம் நன்றியுணர்வோடு பழகும் தன்மை கொண்டது. மனிதர்களும் தங்கள் வீட்டில் உள்ள செல்ல பிராணியை நன்றாக கவனித்து வருவார்கள். தை மாசம் தமிழர்களின் அறுவடை மாதம் ஆகும். தை மாதம் விளைந்த நெல் பயிர்களை அறுவடை செய்து இயற்கை அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் விழாவை நிகழ்த்துவார்கள். சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக முதல் நாள் பொங்கல் இயற்கையின் கொடை தன்மையை சிறப்பிக்கும் விதமாக கொண்டாடி மகிழ்வார்கள். இரண்டாம் நாள் மாட்டு பொங்கல் இந்த நாளில் வாசலில் மாக்கோலம் இட்டு மாடுகளை அலங்கரித்து விவசாயத்திற்கு ஓயாது உழைத்த மாடுகளை சிறப்பிக்கும் விதமாக மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. காளைகளின் வீரத்தை மெய்ப்பிக்கும் வகையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தில் பரவலாக நடைபெறுகிறது. மாட்டு வண்டி போட்டிகளும் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த போட்டிகள் ஆகும். இந்தியாவின் மற்ற மாநிலங்களில் சங்கராந்தி என்ற பெயரில் பொங்கல் விழாவை கொண்டாடுகிறார்கள்.

விவசாயத்திற்கு பெரிதும் உதவும் நாட்டு மாடுகளின் பெருமையை உணர்த்தும் போட்டிகள் மற்றும் நன்றி தெரிவித்து கொண்டாடும் பாரம்பரியம் மிக்க பண்டிகை பொங்கல் விழா தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைப்பெறும். விவசாயத்திற்கு மட்டும் இன்றி தாயை போல் அரவணைக்கும் உறவு உண்டு எனில் அது மாடுகள் தான். உழைத்து களைப்படைந்த விவசாயிக்கு தன்னுடைய மடியை தந்து அரவணைத்த காட்சிகள் பலரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது…..இணையவாசிகளின் மனதை கவர்ந்த அந்த காணொலி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது….

You may have missed