மண மேடையின் முன்பு வேட்டிய மடிச்சு கட்டி இந்த மனுஷன் போட்ட ஆட்டத்தினை பாருங்க..!

happy-dance-video-news-trends

திருமணம் என்றால் ஆட்டம் பாட்டம்…கொண்டாட்டம்…..தான் என கிராமம் முதல் நகரம் முதல் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். 90-ஸ் காலத்தில் கிராமங்களில் திருமண ஜோடிக்கு வாழ்த்துக்களை சிறுவர், சிறுமியர் மற்றும் நண்பர்கள் கவிதைகளாக தெரிவிப்பார்கள். திருமணம் முடிந்த பின்னர் சிறுவர் சிறுமியர் 90-ஸ் காலகட்டங்களில் வெளிவந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் பாடலான நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணு தான் பேரு விளங்க இங்கு வாழணும்…… பாடலை சில திருமணங்களில் பாடுவார்கள், மேலும் ஒரு சில திருமணங்களில் சிறுவர் சிறுமியர் அந்த பாடலுக்கு நடனம் ஆடுவார்கள். அதை பார்ப்பதற்கென்றே திருமணத்திற்கு வந்தவர்கள் உற்சாக மிகுதியால் நடனம் ஆடுவதும் உண்டு. அதெல்லாம் அந்த காலம் என்று கூறும் 2k-கிட்ஸ்கள் காலங்களில் திருமண ஜோடிகள் நடன குழுவினருடனும், நண்பர்களுடனும் ஆட்டம் போட்டு திருமண மண்டபத்தை அதிர வைக்கும் சம்பவங்கள் நடந்தேறி வருகிறது.

ஆடாத கால்களையும் ஆட வைக்கும் சில பாடல்கள் அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை தனக்கு பிடித்த பாடல்களை மனிதர்கள் மிகவும் ரசிப்பார்கள், ரசிப்பதோடு இல்லாமல் பாட்டுகளை மனப்பாடம் செய்து பாடுவார்கள்…….ஒரு சிலர் அந்த நடன அசைவுகளை அப்படி ஆடுவார்கள். கூட்டத்தில் அனைவரும் ஒன்றாக ஆடும் போது ஆட தெரியாதவர்களும் தங்களுக்கு வரும் நடன அசைவுகளை ஆடி மகிழ்ச்சியடைவார்கள்.

இங்கே ஒரு கிராமிய நடன சூறாவளி வேட்டியை மடித்து கட்டி கொண்டு திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்களை அசர வைக்கும் விதமாக மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற பாடலான வாத்தி கம்மிங்க் பாடலுக்கு கிராமிய மணமுடன் ஒரு குத்தாட்டத்தை ஆடி அசர வைத்திருக்கிறார். அந்த காணொலியை கீழே காணலாம்…

You may have missed